மரவள்ளிக் கிழங்கு வடை

mala31
October 31, 2012 10:55 முப

தேவையான பொருட்கள்

தேவையான பொருள்கள்:

மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்

தயாரிக்கும் முறை

* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.

* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத்
தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.