விதிமுறைகளும் வரையறைகளும்

தமிழ் நண்பர்கள்
பிப்ரவரி 20, 2010 07:08 பிப

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Terms & Conditions எப்போதும் நடைமுறைக்கேற்ப மாற்றப்படலாம்.

விதிமுறைகள் மற்றும் வரையறைகள்

1. சக குழும நண்பர்களையோ, மற்றவர்களையோ தனிப்பட்ட முறையிலோ அல்லது பொது முறையிலோ மனவேதனைப்படுத்தப்படுவது கூடாது.

2. தகாத படங்கள், பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள் பதிவுசெய்யப்படக்கூடாது.

3. மற்றவர்களுக்கு சொந்தமான கருத்தையோ, படத்தையோ, பதிவுகளையோ, விபரங்களையோ மற்றும் அவரது உரிமைமீறல் நடவடிக்கைக்குட்பட்ட எதையோ அந்தந்த நபர்கள், இணையதளம், வலைப்பக்கம், நூல் வெளியீட்டாளர்கள் அனுமதி பெறாமல் இங்கே பதிவது கூடாது.

4. INDIAN Cyber சட்டங்களில் சொல்லப்பட்ட குற்றச்செயல்களிலோ அல்லது மற்ற குற்றச்செயல்களிலோ ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் நபர்களின் விபரங்களை அரசு கேட்கும் பட்சத்தில் தளத்தில் பதிந்துள்ள விபரங்கள் கையளிக்கப்படும்.

5. பயனாளர்களால் பதியப்படும் மின்பதிவுகள், படங்கள், கோப்புகள், கருத்துகள் மற்றும் அனைத்தின் முழு உரிமையும் பொறுப்பும் அந்தந்த பயனாளர்களுக்கே உரித்தானதாகும். அது INDIAN CYBER விதிமுறைகளுக்கு எதிரானதாக இருப்பின் கண்டிப்பாக அதை அந்தந்த பயனாளர்கள் தளத்திலிருந்து நீக்க வேண்டும். அல்லது தளஉரிமையாளராலோ அல்லது அதற்கு தகுதியானவராலோ நீக்கப்படும்.

6. பயனாளர்களின் இடையே உரிமைமீறல் சம்மந்தமான மின்பதிவுகள், படங்கள், கோப்புகள், கருத்துகள் மற்றும் எதுவும் இந்ததளத்தின் மூலம் பரிமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.

7. உடலுறவு, பாலியல் வன்முறை, குழந்தை பாலியல் வன்முறை சம்மந்தமான படங்கள், பதிவுகள், கோப்புகள் மற்றும் அனைத்தும் பதிவது கூடாது.

9. மதவெறி, இனவெறி ஆரியதிராவிட பிரிவினைவாதம் போன்றவற்றை பரப்புவதற்காக தோழர்கள் இங்கே செயல்பட வேண்டாம்.

10. தளம் இந்தியாவில் இருந்து செயல்படுவதால் இந்திய அரசாங்க விதிமுறைகளுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். இந்திய அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட அமைப்புகள், நபர்கள் போன்றவற்றிற்கு சாதகமான படங்கள், பதிவுகள், கோப்புகள் மற்றும் அனைத்தும் பதிவது கூடாது.

11. தங்கள் வலை முகவரி, இணையதள முகவரி போன்றவைகளை  தங்கள் பதிவுகளின் கீழ் போட்டுக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அதிக முறை போடுவது 'ஸ்பேம்' எனக்கொள்ளப்படும்.

மேலே சொல்லப்பட்ட அனைத்துக்கும் எதிராகவோ அல்லது இத்தளத்தின் இயல்பான நடைமுறைக்கு எதிராகவோ செயல்படுவது அறியப்பட்டால் அவர்களது பயனர் அங்கத்துவம் எவ்வித முன்னறிவிப்பின்றி தடுக்கப்படும்.
 

தளம் அமைதியாக செயல்பட தங்கள் ஒத்துழைப்பை நல்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.


நன்றிகடைசியாக திருத்தப்பட்டது : 4-Oct-2015