இறால் வறுவல்

பிரியா
October 29, 2012 09:49 பிப

தேவையான பொருட்கள்

இறால் - 1 / 4 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறி மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 மிளகாய் தூள், கறி மசாலா தூள், உப்பு போடவும். பிறகு இறாலை போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய பிறகு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் சுண்டியதும் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும், பிறகு இறக்கவும்.