வெண் பொங்கல்

பிரியா
October 19, 2012 09:02 பிப

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1 / 4 கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிது (துருவியது)
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
உப்பு -தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை

அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி, 2 1/2  கப்  தண்ணீர் சேர்க்கவும்.
இதனுடன் இஞ்சி, உப்பு சேர்க்கவும்.
குக்கரில் வைத்து 5 விசில் விடவும்.
வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பொங்கலில் போட்டு கிளறவும்.