காளான் குருமா

பிரியா
October 19, 2012 03:54 பிப

தேவையான பொருட்கள்

காளான் - 1 /4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - சிறிது
தேங்காய் - 1 கப் (துருவியது)
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை

காளானை வென்னீரில் போட்டு எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், நன்றாக வதங்கிய பிறகு காளான் சேர்த்து வதக்கவும்.

மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

அரைத்த தேங்காய், கசகசா, சோம்பு சேர்த்து கொதிக்க விடவும், இறக்கிய பிறகு கொத்தமல்லி தழை சேர்க்கவும்.