வாழைப்பூ வடை

பிரியா
October 19, 2012 03:25 பிப

தேவையான பொருட்கள்

வாழைப்பூ - 2 கப்
கடலை பருப்பு - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 6
சோம்பு - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை

கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் வாழைப்பூ, வெங்காயம், உப்பு சேர்த்து பிசையவும்.
இந்த மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.