புளி இல்லாத‌ OR புளி சேர்க்காத‌ ஒரு வகை பத்திய‌ குழம்பு

gomathy
செப்டம்பர் 26, 2012 03:31 பிப

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் 1
கத்திரிக்காய் 2
துவரம்பருப்பு 1/4 ஆழாக்கு
தேங்காய்த்துருவல் 1மேசைக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் 3

தயாரிக்கும் முறை

முதலில் துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைகாய், கத்திரிக்காய்களை துண்டுகளாக்கி சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்றமாதிரி மிளகாய்த்தூள் போட்டு அடுப்பிலேற்றி காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும்

அதற்குள் தேங்காய்த்துருவல் வெங்காயம் மிளகு சீரகம் இவ்ற்றை நன்றாக‌ அரைத்து எடுக்கவும்

காய்கள் வெந்த‌ பின்னர் வேக வைத்த‌ பருப்பை நன்கு மசித்து அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு கிளறி குழம்பு போல‌ வந்ததும் இறக்கி வைத்து 1/2 TEASPOON தேங்காய் எண்ணெயில் கடுகு உளுந்தபருப்பு கறிவேப்பிலை தாளித்துவிடவும்

வாரம் ஒரு முறை இந்த‌ குழம்பு செய்து சாப்பிடுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது.

(ஹாங் சொல்ல‌ மறந்துவிட்டேன் இந்த‌ புளி இல்லாத குழம்புக்கு இஞ்சித்துவையல் தொட்டு சாப்பிட்டால் இன்னும் நல்லது.)

இஞ்சித்துவையல் செய்முறை:

இஞ்சி 1 பெரிய‌ துண்டு, மிளகாய்வற்றல் 4 புளி ஒருஅரி நெல்லிக்காய் அளவு உப்பு தேவைக்கேற்ப‌ செய்முறை இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக‌ நறுக்கிக் கொண்டு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி, மிள்காய்வற்றல் இரண்டையும் வதக்கி புளி, உப்பு சேர்த்து நைசாக‌ அரைத்து கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து இஞ்சி துவைய்லை போட்டு நன்கு சுருள‌ வதக்கி எடுக்கவும்)

:cook1: