விநாயகர் சதுர்த்தி – கொலக்கட்டை

Karthika
செப்டம்பர் 18, 2012 05:59 பிப

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 4 கப்
வெல்லம் – (1/4 kg)
தேங்காய் – 1 மூடி
பாசி பருப்பு – 1 கப்

தயாரிக்கும் முறை

  • பச்சரிசியை 2  மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பொடி செய்து கொள்ளவும். (ஈரம் இல்லாமல்)
  • பாசி பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும். (தண்ணீர் கொஞ்சமாக சேர்க்கவும்).
  • தேங்காயை துருவி கொள்ளவும்.
  • அரிசி மாவை , வெல்லப்பாகு, வறுத்த பாசி பருப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொழுகட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும்.
  • ருசியான கொலக்கட்டை ரெடி.