ரோஜாவின் காதல்

vasanth
செப்டம்பர் 16, 2012 03:04 பிப

உன் மனதை புரிந்து கொள்ளாமல்
காதல் கொலை செய்த அவளின்
கூந்தலுக்கு மணம் சேர்ப்பதை விட
உன் மரணஊர்வலத்தில்
உன் களங்கமில்லா காதலுக்குப்
பெருமை சேர்க்க
என் மணத்தை தருவதில்
பெருமிதம் கொள்கிறேன்...

காதலே...
உன்னை நானும் காதலிக்கிறேன்!