பப்பாளி

வினோதன்
செப்டம்பர் 01, 2012 11:56 முப

பப்பாளி

  1. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது.
  2. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.
  3. மேலும்- நரம்புகள் பலப்படவும், ஆண்மைத் தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்
  4. மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
  5. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களைத் தாக்காது.
  6. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
  7. கரு கொண்டிருக்கும் தாயாமார்கள் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது. பப்பாளி பழம் கருவை லைத்துவிடும் தன்மை கொண்டது.