சித்தாளின் மகன்:

கற்பனைத்திருடன்
ஆகஸ்ட் 23, 2012 05:43 பிப
பால்குடித்து  பசியாரவேண்டியவனை 
சலித்த  மணலில் சாப்பாடு  போடுகிறாயோ..?
 
அப்பன் ஆத்தாளைபோல் கருப்பாய் பிறந்துவிட்டானே
உன்னை எவள் கட்டிக்கொள்வாள் என்று 
செங்கல்லில் சிகப்பேற்ற கூட்டிப்போகிறாயோ?
 
பவுடர் இல்லையென்று 
சிமெண்ட் வாசத்தில் சென்ட் 
அடிக்க கூட்டிப்போகிறாயோ?
 
தாலாட்டு பிடிக்காதோ
என சந்தேகிக்கின்றன கனத்த சத்தமிடும் 
சாந்து சட்டியும் ,கான்கரிட் மெசினும் ..
 
எதற்கு இந்த ஒத்திகை 
கட்டிட என்ஜினியராக்கவோ ?