தீயல்

கற்பனைத்திருடன்
ஆகஸ்ட் 23, 2012 02:30 பிப

தேவையான பொருட்கள்

தேங்காய் திருவல்,
வெங்காயம்,
வெண்டைக்காய்,
கருணைக்கிழங்கு,
கத்தரிக்காய்,
புளி

தயாரிக்கும் முறை

 
கடந்த வாரம் சனியன்று திருநெல்வேலி ஊர்க்கார நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன் 
மதியவேளையில் தடபுடலா ஒரு சைவ சமையல் தீயல், ரசம், உருளைப்பொரியல், முட்டை பொரியல் ,
அப்பளம் என்று  வயிற்றை நிரப்பிவிட்டார்.
 
இதில் தீயல் என்பது திருநெல்வேலியின் அல்வாவைப்போல் சிறப்பாமாம் அதைப்பத்தின 
செய்முறையை கேட்டேன் இதோ .
 
நண்பரின் விளக்கம் :
அது ஒன்னும் இல்ல மக்கா கொஞ்சமா தேங்கா திருவி எடுத்து வச்சுக்க , அப்பறம் 
சின்ன உள்ளிய (வெங்காயம்) கொஞ்சம் ரெண்டையும் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கணும் 
தேங்கா திருவள் கோல்ட் கலர்ல வந்ததும் அத எடுத்து மிக்சியில போட்டு அரைச்சு எடுத்துக்கணும்ல
பின்ன வெண்டைக்காய்,கருணைக்கிழங்கு,கத்தரிக்காய் இதெல்லாம் வெட்டி எடுத்துட்டு ,மிக்சியில அரச்சதையும் 
வெட்டி எடுத்த கறியையும்(இவர்கள் நடையில் இங்கே கறி என்றால் வெஜ் என்று பொருள் ) சேத்து தேவையான 
அளவுக்கு கார சமாச்சாரங்கள்,உப்பு இவத்தை எல்லாம் சேத்து தண்ணி விட்டு லேசா கொதிக்க விடனும்ல 
அப்பறம் புளிக்கரைசல் சேத்து கொதிச்ச பிறகு.கடைசியா தாளிக்கண்ணும்ல.
 
குறிப்பு: தீயல் கருப்பா வந்ததுனா நீங்கதான் சமையல் கில்லாடி.