கேரட் ஜூஸ் (Carrot Juice)

mala31
ஆகஸ்ட் 17, 2012 06:38 முப

தேவையான பொருட்கள்

கேரட் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்/தேன்

தயாரிக்கும் முறை

கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.

துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிக்கவும், மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.

டம்ளரில் ஊற்றி கொடுக்கவும்.

 

* இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.

(Tamil Koodal)