வடைகறி

ஆனந்த்
ஆகஸ்ட் 14, 2012 03:15 பிப

தேவையான பொருட்கள்


கடலைப் பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - 3/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
முதலில் தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1

தயாரிக்கும் முறை

 • முதலில் கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.
 • அரைத்த வைத்துள்ள கடலைப் பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் இட்லி வேகவைப்பது போல வேகவைத்து கொள்ளவும்.
 • வேகவைத்த கடலைப் பருப்பு உருண்டைகள் சிறிது நேரம் ஆறிய பிறகு ஒன்றும் பாதியுமாக உதிர்த்து கொள்ளவும்.
 • -------------------------------------------------
 • வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். கொத்தமல்லியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
 • அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 • அதன் பிறகு தக்காளி சேர்த்து மேலும் சிறிது வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
 • பிறகு தேவையான அளவு தண்ணீருடன் தேங்காய் பாலினை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
 • கடைசியில் உதிரித்து வைத்துள்ள கடலைபருப்பினை போட்டு 5 நிமிடம் வேகவைத்து கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 • இப்பொழுது சுவையான வடைகறி ரெடி.

Note:

இதனை இட்லி, தோசை, சாப்பத்தி மற்றும் பூரியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.