ஸ்டஃப்டு பட்டாணி ரோல்ஸ்

sri
ஆகஸ்ட் 07, 2012 09:12 பிப

தேவையான பொருட்கள்

பச்சைப்பட்டாணி -12கிலோ
மிளகாய்த்தூள் -12ஸ்பன்
மிளகுத்தூள் -12
கொத்துமல்லி - சிறிதளவு
வெண்ணெய் -25கிராம்
பாலாடைக்கட்டி -50கிராம்
ரொட்டித்தூள் -தேவையான அளவு
நெய் -பொரித்துக் எடுக்க
உப்பு -தேவையான அளவு

தயாரிக்கும் முறை

செய்முறை:


பச்சைப்பட்டாணியை வேக வைத்துக்  எடுத்து கொள்ளவும். நன்கு ஆறியவுடன் மசித்துக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள் உப்பு மிளகுத்தூள் பால் வெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றுடன் சோ்த்து அடுப்பில் வைத்துக் கிளறி கலவை கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்

மைதா மாவில் 32பங்கை எடுத்த பூரி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும் . மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டுக்கொண்ட அவற்றின் நடுவில் அடுப்பிலிருந்து இறக்கிய கலவையைச் சிறிதளவு வைத்து இல்லமால்  உருண்டையாக மூடிக்கொள்ளவும்.

மீதியுள்ள மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சோத்துக் கரைத்துக் அதில் இந்த உருண்டைகளை மூழ்கச் செய்து எடுத்து உடனே ரொட்டித்தூளில் நன்கு உருட்டிக் எடுக்கவும் 
கடாயில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் இந்த உருண்டகளைக் கவனமாய் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் .