பொழுதுபோக்கு

Siraj
ஆகஸ்ட் 06, 2012 09:23 முப

(என் மன வலியில் நான் கிறுக்கிய இந்த கிறுக்கல்கள்
யார் மனதையும் புண்படுத்த அல்ல‌
என் மனதை பண்படுத்த மட்டுமே...)

Sorry Friends for writing this...

என்னை மறந்து விட்டாளாம்
இன்னொருவனுடன் வாழ தயாராகிவிட்டாளாம்
மாப்பிள்ளை பார்க்கிறார்களாம்
என்னிடம் திரும்ப மாட்டாளாம்...

உயிரே வைத்திருந்த என்னைப் பார்த்தா கேட்கிறாய்
ஏன் இன்னும் என்னையே நினைக்கிறாய் என்று?
உன்னைப் போல் நொடியில் மறந்து
கண்டவளை மணந்து மனதில்
கொண்டவளை மனதளவில் கொல்லும்
கொடுமைகாரன் நானல்ல.

என்னை மறந்ததற்கு பதில் சொல்லடி என்று கேட்டால்
அவளையே நினைத்துக் கொண்டிருப்பதற்கு விளக்கம் கேட்கிறாள்
பொழுதுபோக்கிற்காக பொய்யாய் உன்னைப்போல் காதல் செய்ய‌
உன்னைத் தவிர எவராலும் முடியாதடி!!

உன்னைப் போன்ற கேவலத்தைக் காதலித்ததற்கு
முதன்முறையாக வெட்கப்படுகிறேன்!

கணவனிடமே வந்து என் கணவனை அம்மா
தேடத் தொடங்கி விட்டாள் - போதும்
இத்தோடு நிறுத்திக் கொள் என்கிறாயே
உன் கணவனை தேடும் வரை ஊறுகாயா நான்?

உன்னைக் காதலித்த ஒன்றரை ஆண்டும்
உனக்காக காத்திருந்த ஒரு ஆண்டும்
உன்னைப் போன்ற
அசிங்கத்தை நினைத்த இரண்டரை ஆண்டும்
என் வாழ்வின் களங்கமிகு பகுதிகள்!

பொய்யாய்க் காதலிக்கும் உன் போன்ற பெண்களுக்கு,
பொழுதுபோக்காய் காதல் செய்து என் போன்ற‌
ஆண்களை நரகில் துடிக்க வைக்கும் உங்களுக்கெல்லாம்
என் போன்ற நிலை கண்டிப்பாய் வரும்!

என் கண்ணீர்த் துளியின் வேதனையை
கனவிலும் அனுபவித்து விடாதீர்!
இளைய சமுதாயமே விழித்துக்கொள்
என்னோடு முடியட்டும் இது போன்ற பெண்களின்
சதிகார மனக் கொலை!!!

    :(