மனசாட்சி.

நாத்திகன்.
ஜூலை 24, 2012 08:43 முப

                                             மனசாட்சி.
     
          உயர் திரு கணவன் அவர்களுக்கு,  
       
          நான் உங்களுக்குச் செய்வது துரோகமா...? சமுதாய‌ துரோகமா...? கலாச்சார‌ துரோகமா...? எது வென்று எனக்குத் தெரியாது. அப்போது எனக்குத் தெரிந்த‌ தெல்லாம், எனது மூன்று பெண் குழந்தைகள் மட்டும் தான். 

          என்னை, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்து கொண்ட‌ நீங்கள், மூன்று குழந்தைகளுக்கு என்னை தாயாக்கி விட்டு விட்டு, வேறு எவளுடனோ ஓடிவிட்டீர்கள், நீங்கள் என்னை விட்டுப் போகும் போது, மூன்று வயதில் ஒரு குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும், இரண்டு மாதமே ஆன‌ ஒரு குழந்தையும் இருந்தது.

          பிறந்த‌ தெல்லம், பெண்களாகவே பிறந்து விட்டனவே என்ற‌ பயத்திலோ, அல்லது இவர்களுக் கெல்லாம் வரதட்சணைக் கொடுத்து முன்னுக்கு வர‌ முடியாது என்ற‌ கையாலாகாத்தனத்தாலோ எங்களை நடுத் தெருவில் விட்டு விட்டு ஓடிவிட்டீர்கள், சில‌ நிமிட‌ சுகத்துக்காக‌ படுத்து எழுந்த‌ உங்களுக்கு, குழந்தைகளின் அறுமையைப் பற்றி என்ன‌ தெரியும். அதன் பிஞ்சுக் கரங்களின் பரிட்சயம் தெரியுமா...? அவர்களின் அழுகுரலின் அவஸ்த்தை புரியுமா...? அல்லது மார்பை முட்டி பால் குடிக்கும் போது, அதன் பிஞ்சுக் கால்களில் உதை பட்டிருக்கிறீர்களா...? அல்லது கர்பத்தில் புரண்டு படுக்க‌ முடியாமல், மடக்கிப் படுக்க‌ முடியாமல் இரவு பூர‌ தூங்காமல் பிரசவ‌ வேதனையைப் பரிட்சயப் பட்டதுண்டா...? இவைகளை யெல்லாம் அனுபவிக்காததால் அவர்களை விட்டு விட்டு ஓடிவிட்டீர்கள், ஆனால் என்னால் அப்படிச் செய்ய‌ முடிய‌ வில்லையே.

        வறுமையைக் காரணம் காட்டி எங்களுக்கு விசம் கொடுத்து கொன்றிருந்தால் கூட‌ உங்களை ஒரு ஆண்மகனென்று ஒத்துக் கொண்டிருந்திருப்பேன். பசியோடு நாங்கள் எத்தனை நாள் தான் போராடுவது. எனக்காவது பரவாயில்லை, என் குழந்தைகளுக்கு...? அதுவும் பச்சிளங் குழந்தைக்கு...? எத்தனை முறை என் மார்பில் வாய் வைத்து, அந்த‌ பிஞ்சுள்ளம் வெறுமையை உணர்ந்திருக்கும், அதன் அழுகையை அடக்கவே நாள் முழுவதும் என் மார்பை அதன் வயில் தினிக்க‌ வேண்டியதாயிற்று. வேறு வழியேயில்லை. நீங்கள் எங்களை விட்டு விட்டுப் போகும் போது, அடுத்த‌ வேளைச் சாப்பட்டிற்காவது பணத்தை வைத்து வைத்து விட்டுச் சென்றீர்களா...? பால் வாங்க‌ வைத்திருந்த‌ பணத்தைக் கூட‌ எடுத்துக் கொண்டு ஓடி விட்டீர்களே.

        இந்தக் கேவலமான‌, கேடு கெட்டச் சமுதாயம், பெண்ணை ஒரு போகப் பொருளாகத்தானே பார்க்கிறது, அதுவும் ஆண் துணை இல்லை என்றால் கேட்கவே வேண்டாம். சரி எப்படியாவது குழந்தைகளைக் காப்பாற்ற‌ வேலைக்குச் சென்றால், எங்கு வேலைக்குச் சென்றாலும், பெருக்கிக் கூட்டும் போது மார்பைப் பார்ப்பதும், பாத்திரம் துலக்கும் போது தொடையைப் பார்ப்பதும், வீட்டில் ஆள் இல்லாத‌ போது, வேலைக்காரி தானே என்று கட்டிப்பிடிப்பதும் ஆணாதிக்கத்தின் அடாவடித்தனங்கலல்லவா பெருகிக் கிடக்கிறது, அவர்களின் மனங்கலைக் கூட்டிப் பெருக்க‌ எந்தத் துடைப்பமும் இல்லையே.

        இந்தத் தொல்லைகளையேல்லாம் தோலைத்து விட்டுச் சாகலாமென்றால் எப்படி முடியும். இந்தப் பச்சை மண்களை விட்டு விட்டு என்னால் எப்படி முடியும், இந்தச் சமுதாயம் இவர்களை என்ன செய்யுமோ...? சரி அவர்களையும் கொன்று விடலாமென்றால் என்னால் எப்படி முடியும், பத்து மாத‌ வேதனையில் தவமிருந்துப் பெற்ற‌ பிள்ளைகளாயிற்றே, நான் என்ன‌ செய்வது...? என்னை எல்லொரும், விபச்சாரி, தேவிடியாள்[தேவரடியாள்], கால் கேர்ல் இப்படி என்னென்னவோ பெயர் சொல்லி அழைக்கிறார்கள். மாகா பாரதத்தில் ஐந்து பேருக்கு மனைவியாய் இருந்து ஆறாவதாய் கர்ணனும் கணவனாய் இருந்திருந்தால் நன்றாக‌ இருந்திருக்கும் என்று எண்ணிய‌ பாஞ்சாலியை பத்தினி என்கிறார்கள். என்னை வேசி என்கிறார்கள் இந்த‌ சமுதாய‌ முரன்களைப் பார்த்தால் என் குழந்தைகளைக் காப்பாற்ற‌ முடியுமா...? வேறு எந்த‌ வேளைக்குச் சென்றாலும் இதைத்தானே செய்யப் பேகிறேன்.

        இங்கே நான் மட்டும் தான் பலியிடப் படுகிறேன், ஆனால் நம் மூன்று பெண்களும் நன்றாகப் படிக்கிறார்கள், இதையெல்லாம் ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்! இதற்கெல்லாம் நீங்கள் தானே காரணம். 

         சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் உங்களுக்கு விருந்தாக நேர்ந்தது, இப்போது உங்கள் மனைவியாக இல்லை, ஒரு விபச்சாரியாக, இரவில் ஊமை இருளில் என்னை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் எந்த நிலையில் உள்ள, எந்த ஒரு பெண்ணாலும், தன் கணவனின் பரிட்சியத்தை, உணர்ச்சிகளை, அசைவுகளை உணராமல் இருக்க முடியாது.

            உங்கள் விருப்பம் போல அனுபவித்து விட்டு இதுவரை எந்த ஒரு பெண்ணிடமும், இப்படியொரு சுகத்தை அனுபவித்ததேயில்லை என்று சாண்றிதழும், கத்தையாக பணமும் கொடுத்தீர்கள்.

            நான் இலவசமாக வாரி வாரி இறைத்த இன்பத்தை ரசிக்கத் தெரியாத நீங்கள், இப்பொழுது பணத்திற்காக நான் மரக்கட்டையை போல படுத்துக் கிடந்தது உங்களுக்கு இன்பத்தைத் தந்திருக்கிறது.

           அன்று கிடைத்த சுகத்திற்காக அடுத்தடுத்து வந்த நாட்களிலும் விடுதிக்கு வந்தீர்கள், எனனையே கேட்டு பெற்று இன்பம் அனுபவத்தீர்கள், எத்தனை இரவுகள் தான் என்னால் ஊமை இருளில் உங்களை எப்படி சமாளிக்க முடியும்…? அதனால் தான் ஒரு முடிவோடு, உங்களால் நான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது, உங்களுக்குத் தெரியட்டுமே என்ற தைரியத்தோடு தான், ஊமை இருளை ஒளி பெறச் செய்தேன்.

           இதை ஏற்கனவே செய்திருக்கலாம் தான், எந்தக் கணவனும் தன் மனைவியை இந்த நிலையில், இந்த மாதிரி இடத்தில் பார்த்தால் எப்படி சும்மாயிருக்க முடியும், ரத்தம் கொதிக்கும், நரம்பு முறுக்கேறும், கொன்று போட்டு விடலாம் என்று தோன்றும், அதனாலேயே அப்படிப் பட்ட சூழ்நிலையைத் தவிர்த்தேன்.

           ஆனால் என் மனம் பொறுக்கவில்லை, ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சுதந்திரம்…? பெண்கள் சூழ்நிலைக் காரணமாக, தவிற்க முடியாமல் ஒரு தப்பு செய்து விட்டாலே, அவளை பல அடை மொழியிட்டு அழைப்பதும், தூற்றுவதும் மற்றவர்களுக்கு வேலையாகி விடுகிறது, ஆண்கள் மட்டும் எத்தனைப் பெண்களுடனாவது சல்லாபிக்கலாம், அப்படி சல்லாபிக்கும் ஆண்களை எந்த அடை மொழிப் பெயரையும் வைத்து இந்தச் சமுதாயம் அவமானப் படுத்துவதில்லையே ஏன்…? அதற்காக பெண்களும் அந்தத் தவறை செய்ய வேண்டும் என்று நான் வாதிடவில்லை, ஆனால் ஆண்களுக்கு ஒரு நியதி, பெண்களுக்கு ஒரு நியதி ஏன்… ? என்று தான் கேட்கிறேன்.

           இப்படி யோசித்தப் பிறகு தான் எனக்கு அப்படியொரு தைரியம் வந்தது, இங்கே நான் மட்டும் குற்றவாளியில்லை நீங்களும் தான், ஒரு பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டுச் செல்லும் ஒவ்வொரு ஆணும் தான்,

           நான் வறுமைக்கும், என் குழைந்தைகளின் வயிற்றுப் பசிக்கும் குற்றவாளி, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கும், உங்கள் உடற் பசிக்கும் நீங்கள் குற்றவாளி,

           அதனால் தான் அந்த ஊமை இருளை விரட்டி, மின் விளக்கேற்றினேன், என்னைப் பார்த்ததும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வந்தது, எந்த ஆண் மகனுக்கும் இப்படிப் பட்ட நேரத்தில் கோபம் வரத்தான் செய்யும்,

           ஆனால் உங்களுக்கு வந்தது தான் எனக்கு ஆச்சர்யம், என் தலை முடியைப் பிடித்து உயிர் போகும் வலியில் என் இரு கண்ணத்திலும் மாரி மாரி அரைந்தீர்கள், இப்போது இருக்கும் ஆண்மை எங்களை விட்டு விட்டு சென்ற போது இருந்திருக்க வேண்டும்.

           ஒரு சில பெண்களைத் தவிற, எந்தப் பெண்ணும் தங்களது உடலை, தங்களது முழு சம்மத்தோடு விற்பதில்லை, வரதட்சனைக் கோடுமையாலோ, அல்லது மாமியார், கணவன்கலாளோ, இந்தச் சமுதாயத்தாலோ இந்த நிலைக்கு தள்ளப் படுகிறார்கள், அப்படித்தானே நானும்.

           நீங்கள் அடித்தப் பிறகும், உங்கள் காலைப் பிடித்துக் கொண்டு கதறினே…னே, “ நான் செய்யும் இந்த தொழிலை விட்டு விடுகிறேன், என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பரவாழில்லை, நம் குழந்தைகளையாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேனே.

           இப்படிப் பட்ட செயலை செய்து விட்டு ஏற்றுக் கொள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றீர்கள், உங்கள் கெளரவமும், அந்தஸ்தும் கெட்டு விடும் என்றீர்களே, எங்களை விட்டு விட்டுப் பேகும் பேது இந்த கெளரவமும், அந்தஸ்தும் எங்கே போயிருந்தது என்று கேட்டதற்கு, என்னை எட்டி உதைத்து விட்டு போய் விட்டீற்கள்.

           இவ்வளவு நாட்களுக்குப் பிறகு ஏன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்றால், என்ன செய்வது, இதுவரை தெரியாமல் இருந்த உங்கள் முகவரி தெரிந்த பிறகு என்னால் எப்படி எழுதாமல் இருக்க முடியும், என்னைப் போல வேறு எந்தப் பொண்ணையும் இந்த நிலைக்கு ஆளாக்கி விடக்கூடாதே என்ற ஆதங்கம் தான் இந்தக் கடிதத்தை எழுதத்தூண்டியது, அது மட்டுமல்ல, வேறு எந்தக் கணவனும் தங்களது மனைவியை இப்படி விட்டு விட்டு ஓடிவிடக் கூடாது என்பதற்காகவும், எனக்கு இழைக்கப் பட்ட இந்தக் கொடுமை வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் இழைக்கப் படக்கூடாது என்பதற்காகவும் தான்.

          என் மனதில் இருந்த அத்தனையும் கொட்டி விட்டேன், இனி எழுத என்ன இருக்கிறது, முடித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                                                             இப்படிக்கு 

                                                                                                                                                                                 உங்களால் கைவிடப்பட்ட‌

                                                                                                                                                                                           " கெளசல்யா "

          கடிதத்தைப் படித்து முடித்த சீத்தாராமனுக்கு கை, காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது, அவனது மனசாட்சி அவனை உறுத்தியது, கடிதத்தை மடித்து தன் பாக்கட்டுக் குள் வைத்துக் கொண்டு, காரை எடுத்துக் கொண்டு அவளை, குழந்தைகளை அழைத்து வர புறப்பட்டான், அவள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் மனசாட்சியோடு.

                                                                                                                                                                                                                                                      --- முடிந்தது ---