என் பதிவை பார்க்க இயலவில்லையே? ஏன்?

தமிழ் நண்பர்கள் உதவி
ஜூலை 18, 2012 10:33 பிப

 

நான் தமிழ் நண்பர்கள் தளத்தில் ஒரு பதிவை பதிந்திருந்தேன். ஆனால் அதை என்னால் பார்க்க இயலவில்லை. ஏன்?

தங்களின் பதிவை பார்க்க இயலவில்லை எனில் அதற்கான காரணங்கள் கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

பதிவு பக்கத்திற்கு சென்றால் "பதிவு காணப்படவில்லை (Page not found)" என்ற செய்தி வருகிறது

 1. நீங்கள் தவறான முகவரியில் பார்வையிட்டிருக்கலாம். முகவரியை சரிபார்க்கவும்.
  1. நீங்கள் பதிவின் தலைப்பை திருத்தியிருந்தால் பதிவின் முகவரி மாறும். ஏனவே பதிவின் பழைய முகவிரிக்கு சென்றால் பதிவை பார்க்க இயலாது.
  2. உங்கள் பதிவின் வகை மாற்றப்பட்டிருந்தால், (உதாரணமாக உங்கள் வலைப்பதிவு உடல் நலம் பகுதிக்கு மாற்றப்பட்டால், அல்லது கவிதை பதிவு வலைப்பதிவாக மாற்றப்பட்டால்) பதிவின் முகவரியிலும் மாற்றம் வரும். எனவே நீங்கள் பார்ப்பது தவறான பழைய முகவரியாக இருக்கலாம்.
 2. உங்கள் பதிவு அழிக்கப்பட்டிருக்கலாம்.
  1. உங்கள் பதிவு தவறான தகவலை கொடுக்கும் பதிவாக இருந்திருந்தால் அவை அழிக்கப்பட்டிருக்கலாம்.
  2. உங்கள் பதிவு (SPAM, mass Advertisement) ஆக இருந்திருந்தால் அவை அழிக்கப்பட்டிருக்கலாம்.
  3. உங்கள் பதிவு ஏற்கெனவே பதியப்பட்டிருப்பின் புதிய பதிவு அழிக்கப்பட்டிருக்கலாம். (சில சமயம் இரண்டு தடவை பதிவாகி இருந்தால்)
    

பதிவு பக்கத்திற்கு சென்றால் "பக்கத்தை காண அணுமதி இல்லை" என்ற செய்தி வருகிறது

 1. உங்கள் பதிவு வெளியிடப்படாத நிலையில் இருக்கலாம்.
  1. தளத்தில் பதிவில் சில தவறான சொற்களை கண்டறிந்து அவ்வாறான பதிவுகளை கொண்ட பதிவுகளை வெளியிடப்படாமல் இருக்க தானியங்கி வசதி செய்யப்பட்டுள்ளது. உங்கள் பதிவில் அவ்வாறான தவறான சொற்கள் வந்திருந்தால் அவை கண்காணிப்பிற்கு பின்னரே வெளியிடப்படும்.
  2. உங்கள் பதிவு (SPAM, mass Advertisement) ஆக இருந்திருந்தால் அவை வெளியிடப்படாமல் இருக்கலாம்.
  3. உங்கள் பதிவு தளத்தின் விதிமுறைக்கு எதிரான பதிவாக இருந்தால் அவை வெளியிடப்படாமல் இருக்கலாம்.

பதிவு பற்றிய மேலும் தகவலுக்கு தயவு செய்து  info@tamilnanbargal.com  என்ன மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.