தமிழ் நண்பர்கள் தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி?

தமிழ் நண்பர்கள் உதவி
ஜூலை 18, 2012 10:07 பிப

நமது தளத்தில் தங்களது படைப்புகள் வெளிவரவேண்டும் என நீங்கள் கருதினால் உங்களுக்காக சில உதவித்துளிகள் இதோ:

தமிழ் நண்பர்கள் தளம் முழுக்க உறுப்பினர்களாலேயே பதிவுகள் பதியும் படி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் படைப்புகளை மின்னஞ்சலாக அனுப்பிவைத்து அதை சரிபார்த்து வெளியிடும் நடைமுறை நம் தளத்தில் கிடையாது.

தங்களது படைப்புகளை நீங்களாகவே நம் தளத்தில் உடனுக்குடன் வெளியிட முடியும். மாற்றங்களும் செய்துகொள்ள முடியும்.

உங்கள் படைப்புகளை முதன் முதலில் இங்குதான் வெளியிடவேண்டும் என்றோ அல்லது வேறு எந்த தளத்திலும் இதுவரை வராததாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடோ நம் தளத்தில் கிடையாது. உங்களது சொந்த படைப்புகள் எத்தனை நாட்களுக்கு முன் படைக்கப்பட்டதாக இருப்பினும் அதை இங்கு வெளியிட உங்களுக்கு அனுமதி உள்ளது.

தயவு செய்து உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் இவ்வாறு பதியவும். மற்றவர்கள் படைப்பை பதிவது தளவிதிமுறைகளுக்கு எதிரானது.
அவ்வாறு போட வேண்டி கட்டாயத்தில் பதிவின் நிஜ படைப்பாளரின் அனுமதி பெற்று, அப்பதிவை உரையாடல்/விவாத மன்றம் (Forum) பகுதியிலோ அல்லது வலைப்பதிவாகவோ பதியலாம், ஆனால் கண்டிப்பாக நிஜ எழுத்தாளரின் பெயர், இணைய முகவரி போன்றவற்றை பதிவில் குறிப்பிட்டு அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.
 

பதிவுகளை பதிதல்:

 1. முதலில் தளத்தில் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தளத்தினுள் நுழையவும். இது மிகவும் எளிது. நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கு மூலமும் தளத்தில் மிக எளிதாக நுழையலாம்.
 2. தளத்தில் நுழைந்த பின் தளத்தின் மேல் பகுதிலில் "பதிக" என்பதிலிருந்து கவிதை, கதை போன்ற உங்களது படைப்பின் வகையை தெரிவு செய்யவும்.
 3. அதில் வரும் பக்கத்தில் படைப்பின் விபரங்களை (உதாரணம்: தலைப்பு, பதிவு உள்ளடக்கம், வகை) தட்டச்சவும்.
 4. பதிவு படிவத்தின் கீழே இருக்கும் 'சேமி/Save' என்ற தெரிவை அழுத்தவும்.
 5. பதிவு சேமிக்கப்பட்டு பதிவு பக்கம் காட்சி அளிக்கும்.
 6. சில நேரம் பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் அவை தெரிவிக்கப்படும். அவற்றை திருத்தி சரி செய்த பின் மீண்டும் பதிவை சேமிக்க வேண்டும்.
 7. படைப்பின் வகையை சரியாக தெரிவுசெய்து வெளியிடவும். உதாரணமாக சிரிப்புகளை கவிதை பக்கத்தில் பதிய வேண்டாம்.

பதிவுகளை திருத்துதல்:

 1. நீங்கள் பதிந்த பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிமைக்கவோ அல்லது திருத்தவோ அனுமதி உண்டு.
 2. இதை செய்ய, முதலில் நீங்கள் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும்
 3. மாற்றம் செய்ய வேண்டிய பதிவின் பக்கத்திற்கு செல்லுங்கள்.
 4. பதிவின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் "திருத்து/Edit" என்பதை தெரிவு செய்யவும்.
 5. பதிவை திருத்திய பின் 'சேமி/Save' என்பதை அழுத்தி பதிவை சேமித்துக்கொள்ளலாம்.

பதிவுகளை அழித்தல்:

 1. நீங்கள் பதிந்த பதிவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழிக்க அனுமதி உண்டு.
 2. இதை செய்ய, முதலில் நீங்கள் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும்
 3. அழிக்க வேண்டிய பதிவின் பக்கத்திற்கு செல்லுங்கள்.
 4. பதிவின் தலைப்பின் பக்கத்தில் இருக்கும் "திருத்து/Edit" என்பதை தெரிவு செய்யவும்.
 5. பதிவு படிவத்தின் கீழே இருக்கும் 'அழி/Delete' என்ற தெரிவை அழுத்தவும்
 6. அடுத்து வரும் பக்கத்தில் தங்களிடம் 'கண்டிப்பாக அழிக்க வேண்டுமா?' என கேள்வி கேட்கப்படும்
 7. கண்டிப்பாக அழிக்க வேண்டும் எனில் 'ஆம்/Yes' கொடுக்கவும்.
 8. பதிவு அழிக்கப்பட்ட செய்தி தங்களுக்கு தெரிவிக்கப்படும்.

 

தங்களின் வலைதளத்தின் ஒரு பதிவின் முகவரியை மட்டும் இத்தளத்தின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதை Status ஆக மட்டும் போட்டுவிட வேண்டுகிறோம். இதைச் சாதாரண பதிவாக பதிய அனுமதி இல்லை.

அனைத்து பதிவுகளும் நம் தளத்தின் விதிமுறைகள் http://tamilnanbargal.com/node/45 க்கு உட்பட்டது