தேங்காய் பால் கஞ்சி

Karthika
ஜூலை 05, 2012 08:43 முப

தேவையான பொருட்கள்

தேங்காய், வெந்தயம், பச்சரிசி, ஏலக்காய்.

தயாரிக்கும் முறை

1.   தேங்காயை அரைத்து, பிளிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்

2.   குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும்.

3.   களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு 1:1.5(அரிசி: தண்ணீர்) என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

4.   குக்கரை திறந்து தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறவும்.

5.   சுவையான, சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார்.

6.   இதனுடன் சீனி கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.