வறுமை

shivathavasi
ஜூன் 18, 2012 07:36 பிப
உணவில் வறுமை உடலில்   வறுமை 
குணத்தில் வறுமை செயலில் வறுமை 
பணத்தில் வறுமை வசதியில்  வறுமை 
மணத்தில் வறுமை மலரில் வறுமை 
 
அறிவில் வறுமை செயலில் வறுமை 
அன்பில் வறுமை இனிமையில் வறுமை 
கறியில்  வறுமை வலிமையில் வறுமை 
கண்களில் வறுமை ஒளியில் வறுமை 
 
பெண்மை வறுமை மென்மையில் வறுமை 
உண்மை வறுமை புண்ணிய வறுமை 
ஆண்மை வறுமை ஆளுமை வறுமை 
திண்மை  வறுமை வெற்றியில் வறுமை 
 
அறுப்பு வறுமை அளப்பில் வறுமை 
உறுப்பு வறுமை உடலில் வறுமை 
சிறப்பு வறுமை ஆதரவு வறுமை 
திறப்பு வறுமை வளர்ச்சி வறுமை 
 
ஓய்வில் வறுமை சக்தியில் வறுமை 
ஆய்வில் வறுமை அறிவில் வறுமை 
காயில் வறுமை கனியில்வறுமை 
தாயில் வறுமை பாசத்தில் வறுமை 
 
கோயில் வறுமை தெய்வ வறுமை 
சேயில் வறுமை தாய்மையில் வறுமை
தொய்வில் வறுமை தோல்வியில் வறுமை 
நோயில் வறுமை பாயில் வறுமை 
 
திறமைக்கு வறுமை வறுமைக்கே  திறமை 
பொறுமைக்கு வறுமை வறுமைக்கே பொறாமை 
குறைவுக்கு வறுமை வறுமைக்கு குறைமை
வறுமைக்கு வறுமை வளத்திற்கு வளமே!