பாலக் பக்கோடா

Karthika
May 09, 2012 09:09 முப

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - ஒரு கப்

பாலக்கீரை - ஒரு கட்டு

வெங்காயம் - ஒன்று

இஞ்சி - சிறிய துண்டு

சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தயாரிக்கும் முறை

பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய பருப்புடன் உப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து பிசையவும்.

மாவை சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளி போட்டு பொரித்தெடுக்கவும்.