அரசனை நம்பி புருசனை கைவிடாதே

தமிழ்
மார்ச் 31, 2012 08:10 பிப

அரசனை நம்பி புருசனை கைவிடாதே
(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)

அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை கூறுகிறது இப்பழமொழி.

இப்பழமொழி உதாரணமாக பயன்படுத்தப்படும்.

புருசன் = கணவன்

 

அரச மரத்தை மரங்களின் அரசன்  என்பதால் இப்பழமொழியிலும் சிலர் அரசன் என்பதற்கு அரச மரம் என்றும் பொருள் கூறுவார்கள். அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் சாத்தியம் அதிகரிக்கும் என்பதால் அம்மரத்தை நம்புவதாக பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் அரச மரத்தை நம்புவதால் யாரும் புருசனை கை விடுவதில்லை என்பது இயற்கையாகவே இருப்பதால் இக்கருத்து சிலரால் பிழையாக பிற்காலத்தில் புனையப்பட்டது என்பது தெளிவாகிறது.

 

இவை ஒத்த பழமொழிகள்:

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே