சக்கரை வள்ளி கிழங்கு கோலா உருண்டை

Karthika
மார்ச் 12, 2012 04:54 பிப

தேவையான பொருட்கள்


சக்கரை வள்ளி கிழங்கு(வேக வைத்து மசித்தது) - 1 கப்.

இஞ்சி பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்.

சோம்பு, சீரகம் – அரை டீ ஸ்பூன்.

பட்டை, கிராம்பு – சிறிதளவு.

பொட்டுக்கடலை மாவு - ¼ கப்.

வெங்காயம் – 1.

புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு.

மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்.

மிளகாய் தூள் – 1 ½ டீ ஸ்பூன்.

எண்ணெய், உப்பு – தேவைக்கு.

தயாரிக்கும் முறை

செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த சக்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

ஆறியதும் நறுக்கிய வெங்காயம் , புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.

சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் சக்கரை வள்ளி கிழங்கு கோலா உருண்டை தயார்.