புளீ வடை

gomathy
பிப்ரவரி 25, 2012 11:22 பிப

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி 1கப்
புளித்த மோர் 1 கப்,
மிளகாய் வற்றல் 8 அல்லது காரத்திற்கு ஏற்ப
எள் [கருப்பு] 2 டீ ஸ்பூன்,
தேங்காய் துருவல் 1கப்
பொரித்து எடுக்க எண்ணெய்

தயாரிக்கும் முறை

முதலில் அரிசியை புளித்த மோரில் 1 மணீ நேரம் ஊற வைக்கவும்.

பின்பு அத்துடன் மிளகாய்வ்ற்றல் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பின்பு அத்துடன் எள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து மெலிதாக வடை தட்டுவது தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

இது வடை போல மெருதுவாகவும் கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் புளிப்பு சுவைஉடனும் இருக்கும்.

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதிகை தொலைக்காட்சியில் சாப்பிட வாங்க நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது ஆனால் நான் காப்பிஅடிக்கவில்லை ஏனென்றால் இந்த ரெசிப்பி நாந்தான் செய்து காண்பித்தேன்

இப்படிக்கு

Mrs. Lathabaalu :cook1: