HollywoodRasigan's படம்

Moneyball திரைவிமர்சனம்

ஃபர்ஸ்ட் சுயபுராணம் -
இந்த வாரம் முழுவதும் “கண்டிப்பாக பார்க்கிறேன், டவுன்லோடுகிறேன்” அப்படின்னு சொன்ன சில ஹாலிவுட் படங்களையும், தவறவிட்ட சில நல்ல தமிழ்ப் படங்களையும் பார்த்துவிடுவது என்ற முடிவில் ஓட்டிக்கொண்டு இருந்தேன். அனேகமாக அடுத்த வாரமும் இது தொடரும். (ஏன்னா இந்த ஹாலிவுட்ரசிகன் சொன்ன வாக்கை காப்பாற்றுவான். ஹி .. ஹி ... பார்த்தவற்றை கீழே அண்மையில் பார்த்த படங்கள் பகுதியில் சொல்கிறேன்) மேலும் கருந்தேளார் பரிந்துரைத்த ஷெர்லாக் ஹோம்ஸ் நாடகத்தையும் தொடர்ந்து பார்த்து வருவதால் பதிவுகள் எழுத நேரம் பெரிதாக கைகூடி வரவில்லை. சீக்கிரம் கொஞ்சம் அதிகமாக எழுதப் பார்க்கிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இனி இன்றைய படம் -

ஸ்போர்ட்ஸ் பற்றிய கதை, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர், ப்ராட் பிட், ஓக்லாண்ட்(???) ஏஸின் 2002ம் வருட 20 தொடர் வெற்றிக்குப் பின் உள்ள உண்மைக் கதை என பல எதிர்ப்பார்ப்புகளுடன் பார்த்த படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் கொஞ்சம் நிச்சயமாக என்றுதான் சொல்லவேண்டும். ( இந்த ஸ்டைல் எங்கேயோ பார்த்த மாதிரி இல்ல? ஹி ஹி )

ஃபுட்போல் அளவிற்கு எனக்கு பேஸ்போல் பற்றிப் பெரிய அளவில் ஞானம் இல்லாததால் 100 வீதம் படம் என்னுடன் ஒட்டவில்லை. நிறைய சொற்கள் படம் பார்க்கும் போது எனக்கு புரியவில்லை [Playoffs, Post-Season, First Base, Getting on Base …. ] . ஆனாலும் யதார்த்தமான, உண்மைக் கதையாலும், ப்ராட் பிட்டின் நடிப்பாலும் படம் பிடித்திருந்தது. ஏதோ … என்னால் முடிந்தவரை, புரிந்தவரை படத்தைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை

படம் நகர்வது பில்லி பீன் எனும் ஓக்லாண்ட் அத்லெடிக்ஸின் ஜெனரல் மனேஜரை சுற்றி. சிறுவயதில் பேஸ்போலில் ஆல்ரவுண்டராக இருந்து படத்தின் ஆரம்பத்தில் 2011ம் ஆண்டின் சீசனில் நியுயோர்க் யான்கீஸிடம் தோற்றதால் கடுப்பிலும், டீமின் முக்கிய புள்ளிகள் 3 பேர் (பேரெல்லாம் எதுக்கு இப்ப? கன்டினியு ரீடிங்) கன்டிராக்ட் பீரியட் முடிந்து லீக்கின் பெரிய டீம்களுடன் ஒப்பந்தமாவதால் டென்சனிலும் ஆபிஸில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார். நல்ல ப்ளேயர்ஸ் சிலரை எடுத்துப் போடலாம் என்றால் டீம் நிர்வாகத்திடம் சல்லிக் காசு இல்லை. ஏதாவது புது முறையை இவ்வருடம் கையாளலாம் என்றால் அவரிடம் வேலை செய்யும் ஸ்கௌட்ஸ்க்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.
thumb2
அந்த மூவரையும் ஈடு செய்வதற்காக பில்லி Cleveland Indians டீமிடம் விளையாட்டு வீரர்களை கைமாற்றச் செல்லும்போது பீடர் ப்ராண்ட் எனும் யேல் யுனிவர்ஸிட்டி பட்டதாரியின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. பீட்டரிற்கு பேஸ்பால் வீரர்களை தெரிவு செய்வதில் ஒரு வித்தியாசமான விதம் இருப்பதை தெரிந்துகொள்ளும் பில்லி மறுநாளே பீட்டரை தன்னிடம் அஸிஸ்டென்ட் மனேஜராக வேலைக்கு சேர்த்துக் கொள்கிறான்.
பீட்டர் புள்ளிவிபரவியல் (அதாங்க Statistics) முறையை பாவித்து ப்ரொஃபெஷனலாக விளையாடாததால் மற்ற டீம்களால் ஒதுக்கப்பட்ட, மிகவும் குறைந்த விலைக்கு வாங்கக் கூடிய நல்ல திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து (சேற்றில் இருக்கும் செந்தாமரைகள்) பில்லிக்கு சொல்கிறான். ஆனால் அவர்களின் திறமைகளை அவர்கள் தற்போது எவ்வாறு விளையாடுகிறார்கள் என மதிப்பிடாமல் கம்ப்யுட்டர் மூலம் அவர்களின் புள்ளிவிபரங்களை மட்டும் வைத்து மதிப்பிடுகிறான். பில்லியின் பழைய ஸ்கௌட்ஸ்க்கு இந்த புதிய முறை பிடிக்கவில்லை. அவர்கள் ப்ளேயர்ஸ் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே வாங்கவேண்டும் என சொல்கிறார்கள்.

இதுப் போதாததற்கு ஏஸின் கோச், பில்லியுடன் ஏற்படும் கண்ட்ராக்ட் பிரச்சினையால் டீமை பழைய முறையிலேயே விளையாட வைக்கிறான். டீம் தோற்க பழி பில்லி மேல் விழுகிறது.

நடப்புச் சாம்பியனான நியுயோர்க் யான்கீஸின் பட்ஜெட்டின் 1/3 பங்கு பட்ஜெட்டுடன் பில்லியும், பீட்டரும் எவ்வாறு சீசனை சமாளித்தார்கள், பின்னர் என்ன நடந்தது என்பதை கட்டாயம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

நூறு ரன் எடுக்க, அந்த நூறு ரன்களையும் அடிக்கக் கூடிய ஸ்டார் ப்ளேயர்ஸ் தேவையில்லை. பத்து ரன்கள் அடிக்கக்கூடிய 10 பேர் போதும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
thumb5

படத்தின் கதையை மேலோட்டமாகப் பார்த்தால் அனேகமான ஸ்போர்ட்ஸ் படங்கள் போல ஒரு நோஞ்சான் டீம் கடைசியில் எப்படி சாதிக்கிறார்கள் என்பது போல இருக்கும். மெயின் கதை பழைய மேட்டர் போல தெரிந்தாலும் என்றாலும் புள்ளிவிபரங்கள், டீமைச் சுற்றி படத்தை நகர்த்தாமல் மேனேஜரை வைத்து எடுத்தது என ஒரு புதிய பரிமாணத்தில் படத்தை கொடுத்திருக்கிறார்கள். திரைக்கதை எழுதியவர் ஸ்டீவன் செய்லியன் (The Girl With Dragon Tatoo [2011], Schindler’s List). இயக்கியவர் பென்னட் மில்லர் (2005ம் ஆண்டு சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கார் விருது).

இவர்கள் தவிர படத்தின் உயிர்நாடி என்று சொல்லக்கூடியவர் ப்ராட் பிட் (மேலே ஃபோடோவில் சிரித்துக் கொண்டு இருக்கிறாரே. அவர் தான்). இவரை தெரியாதவங்க இங்கிலீஸு படம் பார்க்காதவங்க என சொல்லலாம். (Oceans சீரீஸில் வந்திருப்பார்). இவரின் நடிப்பின் வித்தியாசம் பிரமிக்கத்தக்கது. The Curious Case of Benjamin Button படத்திலும், Oceans series, Mr & Mrs. Smith படங்களிலும் இவரின் நடிப்பிற்கு உள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம். படத்தின் கரெக்டருக்கு இவர் பொருந்தாமல், அந்தக் கரெக்டர் இப்படித் தான் இருக்கும் என காட்டுவது இவரின் ஷ்பெஷாலிட்டி. படம் முழுவதும் இவர் ராஜ்ஜியம் தான். மிக அழகாக பில்லி பீன் கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார். தான் நம்பும் விடயத்தை நம்பாமல் நொட்ட சொல்லிக்கொண்டு இருப்பவர்களை ஒதுக்கிவிட்டு தான் சரியென நினைப்பதை செய்து சாதிக்க நினைக்கும் வெறி, நெருங்கிப் பழகினால் விளையாட்டு வீரர்களை கைமாற்றுவது கடினம் என டீமை விட்டு ஒதுங்கியே இருப்பது என நன்றாக நடித்திருக்கிறார்.

அடுத்த பாராட்டு அவருக்கு பக்கத்தில் நிற்கும் ஜோனா ஹில்லிற்கு. Superbad படத்தில் பார்த்ததைவிட இதில் காமெடிக்கான பங்கு கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் நிறைவான நடிப்பு. ஒரு கணனி கீக் ஆக நடிக்க, பேச தனியாக ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் டியுடரிடம் ட்ரெயினிங் எடுத்தாராம். மற்றபடி படத்தில் வரும் கோச், மற்றும் விளையாட்டு வீரர்கள் தம் பாத்திரங்களை அழகாக நடித்து கொடுத்திருக்கின்றனர்.
thumb3

படத்தின் தொழில்நுட்ப விடயங்களும் நன்றாகவே இருந்தன. படத்தின் அதிகமான காட்சிகள் ஒரு பேஸ்போல் ஸ்டேடியத்தின் அடியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. பின்னணி இசை கலக்கலாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் வரும் அமைதி படத்தின் நொடிகளின் சூழலுக்கு பெரிய உதவி.

குறை என்று சொல்லப் போனால், படம் அங்கங்கே கொஞ்சம் அதிகமாக இழுக்கப்பட்டது போன்ற ஒரு ஃபீலிங். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். இடையில் வரும் ப்ராட் பிட்டிற்கும் அவரின் மகளிற்கும் இடையிலான காட்சிகள் தேவையில்லாதது போல காட்சியளித்தாலும் படத்தின் இறுதியில் பில்லியின் முடிவிற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

2012ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், ஏற்கனவே வெளிவந்த விடயங்களில் இருந்து எழுதப்பட்ட சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், Best Sound Mixing என 6 பிரிவுகளில் போட்டியிடுகிறது. கோல்டன் க்ளோப் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டாலும் தவறவிட்டுவிட்டது. Midnight in Paris (சீக்கிரம் எழுதுவேன்) தவிர மற்ற பரிந்துரைக்கப்பட்ட படங்களைப் பார்க்காததால் விருதைப் பெற எவ்வளவு சான்ஸ் இருக்கிறது என சரியாக கூற முடியவில்லை.

ஆனாலும் நேரத்தை போக்க நல்ல படம் ஒன்று தேடிக் கொண்டு இருந்தால் கட்டாயம் எடுத்துப் பாருங்கள். இரண்டு மணி நேரம் ஒதுக்கி அமைதியான மூட் உடன் பாருங்கள்.

Moneyball – 81 / 100
http://hollywoodrasigan.blogspot.com/2012/02/moneyball-2011.html

0
Your rating: None