yarlpavanan's படம்

திரைப் படங்களில்
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

5.8
Your rating: None Average: 5.8 (5 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

உண்மைதான் அன்பரே. நவ நாகரிகம்


6

உண்மைதான் அன்பரே. நவ நாகரிகம் எனும் போர்வையில் அறையில் நடப்பதையெல்லாம் பகிரங்க‌மாகக் காட்டும் சினிமா மனித உள்ளங்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்பதை தற்போதைய மக்களிடையே பயன்பாட்டில் இருக்கும் நடை, உடை, பாவனை, மொழி ஆகியவற்றைக் கொண்டே எடை போடலாம். நல்ல கருத்துக்களைக் கூறி சமுதாயத்தைத் திருத்த முயலும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

aro...'s படம்

கவிதையில் காலகேட்டை கண்டித்து


7

கவிதையில் காலகேட்டை கண்டித்து பாடும் பட்சிக்கு

பணிவுகலந்த பாராட்டுக்கள்.. Clap Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


joshi2010's படம்

வணக்கம் நண்பரே,


5

வணக்கம் நண்பரே,

முதலில் தங்கள் சமூகம் சார்ந்த பார்வைக்கு என் பாராட்டுக்கள்....... முன்பெல்லாம் சமுக்த்தில் ந்டக்கும் விஷயங்கள் படங்களாக வெளிவரும்.... ஆனால் இன்று.... சமுகத்தையே சீரழிக்கும் விஷயங்களே திரைப்படங்களாக வெளிவருகின்றது....... திரைப்படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாது தொலைக்காட்சி நாடகங்களும்...... இன்று ... திரைப்படங்களில் நாகரிகம் என்ற பெயரில் உடை குறைப்பு என்றால்.... நாடகங்களில் மெகா தொடர் என்ற பெயரில்...... ஒழுக்கமில்லாத வாழ்க்கையினை படம் எடுத்துக் காட்டுகின்றனர்........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


yarlpavanan's படம்

கருத்துத் தெரிவித்த


6

கருத்துத் தெரிவித்த Ponvannan, aro, joshi2010 ஆகியோருக்கு நன்றிகள்.

மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை, திரை ஊடகங்கள் திருந்த வாய்ப்பில்லையே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

அருமையாகச் சொன்னீர்கள்


5

அருமையாகச் சொன்னீர்கள் அன்பரே! உண்மை தான் ஆனால் திரைப்படம் என்பது பணத்தைப் போட்டு பணம் எடுக்கும் ஒரு தொழில் யாரும் இலாபத்தைத் தான் பார்ப்பர்கள், அதை ஒரு கலையாகப் பார்க்கும் எண்ணம் மிகவும் சிலருக்கே உள்ளது,

நாடகம் உண்மையில் கலையை வாழவைத்த ஒன்று ஆனால் இன்று அதற்கு மதிப்பில்லை, நமது தலைமுறைகள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வரும் தலைமுறைகள் வழுக்கி விழ திரைத்துறை உறுதுணை புரிகின்றன,

தவறு ஒரு பக்கம் மட்டும் இல்லை இரண்டு பக்கமும் தான், அதற்கு காரணம் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு அந்தக் காலம் போல் நல்லதை சொல்லாததும் ஆகும்,

உமது கவிதைக்கு பாராட்டுக்கள்!

yarlpavanan's படம்

உண்மை தான். தங்கள்


உண்மை தான்.
தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil