வரும் தேர்தலுக்குள் உலகம் அழிந்துவிடும்- டாக்டர் ராமதாஸ் சூசகம்......

ரஹீம்  கஸாலி
ஜனவரி 23, 2012 01:46 பிப


நேற்று வெளிவந்த நக்கீரனில் மருத்துவர் ராமதாசிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கான பதிலையும் படித்ததிலிருந்து ஒரே மரண பயம் என்னை ஆட்கொண்டுள்ளது...
வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்குள் உலகம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு தூக்கமே வரவில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டார் ராமதாஸ்...இப்படி பயப்படும் அளவிற்கு என்று கேட்கறீங்களா? கீழே படிங்க புரியும்....

ராமதாசிடம் கேட்கப்பட்ட கேள்வி: திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என பா.ம.க., பகிரங்க படுத்துவது பிரசவ வைராக்கியம் போல் இருப்பதாகவும், தேர்தல் வந்தால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கிற நிலையிலேயே பா.ம.க.,வின் பலம் இருப்பதாகவும் அரசியல் ஆலோசகர்களால் விமர்சிக்கப்படுகிறதே?

ராமதாசின் பதில்: கார்(மேகம்) உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார்(உலகம்) உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும், பா.ம.க.,எடுத்த முடிவில் இனி மாற்றம் இருக்கப்போவதில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது காலம் இட்ட கட்டளை.

இனி நான்: இப்போது சொல்லுங்கள், தேர்தல் வருவதற்குள் உலகம் அழிந்துவிடும்தானே......
=============================சென்னையை சேர்ந்த சாந்தவேல் என்பவர் கேரளாவிற்கு சென்றபோது மலையாளிகள் அவர் மீது வெண்ணீர் ஊற்றி கொலை செய்தார்கள். அவரின் உடலை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றிய போலிசார் அம்பத்தூர் மின்சார சுடுகாட்டில் தகனம் செய்துள்ளார்கள் என்ற செய்தியை படித்ததும் என் மனதில் தோன்றிய ஒரு ஜோக்....( நான் ஜோக் என்று சொல்லியதால் மன்னிக்கவும்... வேறு வழி இல்லாமல் இதை ஜோக் என்று குறிப்பிட்டுள்ளேன்).

அந்த போலீஸ் ஸ்டேசன் முன்பு எதுக்கு பிணத்தைப்போட்டு போராட்டம் நடத்தறாங்க? லாக்கப் மரணமா?

அதெல்லாம் இல்லை. இப்பல்லாம் போலீசே பிணத்தை எரிக்கறதால் இந்த அனாதை பிணத்தையும் அவங்களையே எரிக்க சொல்லி போராடுறாங்க...
======================