தேவைக் கச்சத் தீவுமே
பாவிகள் செய்வது பாதகமே-மேலும்
பார்ப்பதா மத்தியில் சாதகமா
ஆவித் துடித்திட விவசாயம்-என்ன
ஆகுமோ? அங்கே போராட
கேவி அழுகிறான் மீனவனோ-தினம்
கேட்பார் எங்கே அவன்வாட
கொடுத்தோம் இரண்டும் தவறாமே-உடன்
கொடுத்ததை மீண்டும் பெறுவோமே
அடுத்தாய் எண்ணிச் செயல்டுவோம்-எனில்
அல்லல் பட்டே துயர்படுவோம்
எடுத்திட வேண்டும் ஒருமுடிவே-காலம்
எடுத்தால் என்றும் இலைவிடிவே
படுத்துவர் மேலும் துயர்படவே-அப்
பாவியாய் நாமும் உயிர்விடவே
மத்திய மாநில அரசுகளே-மேலும்
மௌனம் வேண்டாம் அரசுகளே
மெத்தனம் இதிலும் காட்டாதீர்-வீணாய்
மேலும் காலத்தை நீட்டாதீர்
சித்தமே இரங்கிச் செயல்படுவீர்!-உடன்
சிந்தனை இன்றேல் துயர்படுவோர்
எத்தனைக் நாட்கள் பொறுத்திடுவர்-பொங்கிச்
செயல்படின் யாரதைத் தடுத்திடுவர்!?
என்றும் தாழ்ந்தது தமிழ்நாடா-என்ற
எண்ணத்தில் செய்வதே! இக்கேடா?
நன்றே அல்லவாம் ஆள்வோரே-இப்படி
நடந்தால் கோபம் மூள்வாரே!
குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
கொடுமையைத் தடுக்க அறவழியில்
இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
இனமே திரளும் புரிவீரே!
புலவர் சா இராமாநுசம்
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
உணர்வுகள் வெளிப்படும்
உணர்வுகள் வெளிப்படும் பாவிலே
பாவலர் தன் எண்ணத்தைக் கொட்டுகிறார்...
என் தமிழினமே உணர்வாயா?
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
என்றும் தாழ்ந்தது
என்றும் தாழ்ந்தது தமிழ்நாடா-என்ற
எண்ணத்தில் செய்வதே! இக்கேடா?
நன்றே அல்லவாம் ஆள்வோரே-இப்படி
நடந்தால் கோபம் மூள்வாரே!
குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
கொடுமையைத் தடுக்க அறவழியில்
இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
இனமே திரளும் புரிவீரே!

வணக்கம்,,, மிகவும அருமையான
வணக்கம்,,,
மிகவும அருமையான கவிதைகள்... வரிகள் ஒவ்வொன்றும் யோசிக்க, சிந்திக்க வேண்டியவை....
"என்றும் தாழ்ந்தது தமிழ்நாடா "
இன்றைய நிஜம் இது தான்.......










