மேதைக்கு அழைத்த மாமேதைகளிடமிருந்து நான் தப்பிய கதை(புத்தக கண்காட்சி பாகம்-2)......

ரஹீம்  கஸாலி
ஜனவரி 20, 2012 09:57 முப
 இந்த கட்டுரையின் முதல்பாகத்தை படிக்க இங்கே போங்க....

பாலகுமாரனிடம் கேள்விகேட்கும் சிவா

பாலகுமாரனை நெருங்கிய சிவா அந்த வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை கேட்டார்.
"சார் நீங்க ஜென்டில்மேன் படத்துக்கு வசனம் எழுதி இருந்தீங்க. எனக்கு ஒரு சின்ன சந்தேகம். டிக்கிலோனா, ஸ்பூன்லிங்...அதெல்லாம் கூட நீங்க எழுதுனதா? இல்ல கவுண்டமணி - செந்திலுக்கு ட்ராக் எழுதுற வீரப்பன் எழுதுனதா?" என்று கேட்டார்.

அதற்கு பாலகுமாரன்,
நாந்தான் எழுதனேன். நிறைய பேர் என்னை சீரியசான ஆளுன்னு நெனைக்கறாங்க. அப்படி இல்ல. நான் ஜாலியான ஆள்தாம்பா" என்று பதில் சொன்னதாக சிவா சொன்னார். ஆனால், அவர் முகம் வெளிறியிருந்தது. பாலகுமாரன் அந்த பதிலைத்தான் சொன்னாரா? அல்லது வேறேதும் சொன்னாராவென்று சிவாவிற்குத்தான் வெளிச்சம். ஆனால், அவர் அப்படித்தான் பதில் சொன்னதாக சிவா சொன்னார். நாங்களும் நம்பிட்டோம்.

ஞாநியும், மனுஷ்யபுத்திரனும்

அப்படியே அடுத்த வரிசைக்கு வந்தோம். அங்கு ஞாநியும், மனுஷ்யபுத்திரனும் எழுத்தாளர் வாசகர் கலந்துரையாடலில் இருந்தனர். நமக்குத்தான் இலக்கியத்தில் ஒரு எலவும் தெரியாதே...அப்புறம் எந்த லட்சனத்தில் அவர்களிடம் கெள்வி கேட்பது? அப்படியே ஜூட் விட்டேன்.

ஆட்டோகிராப் போடும் கேபிள்

அடுத்ததாக டிஸ்கவரி புக் பேலஸ் போனோம். அங்கே கேபிள் சங்கர், தான் எழுதிய புத்தகன்களை வாங்கிய வாசகர்/ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு தந்தபடியே இருந்தார். அவரை சுற்றி அவரது ரசிகர்கள் மொய்த்தபடி இருந்தார்கள்.( கேபிள் சார்.... நீங்க சொன்னபடியே எழுதிட்டேன். திருப்தியா?) அத்துடன் மின்னல்வரிகள் கணெஷ் விடைபெற்றார்.


புத்தக வெளியீடெல்லாம் இல்லேங்க...சும்மா ஒரு விளம்பரம்.

சிவா, நான், கேபிள், பிரபா,சிராஜ்


பின்னர், நான், சிராஜ், சிவா, பிரபா ஆகியோர் கேபிளின் புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். டிஸ்கவரி புக் பேலசில் புத்தகம் வாங்கவந்த கூட்டத்தை விட எங்கள் கூட்டமே மிகுதியாக இருந்தது. நல்லவேளையாக டிஸ்கவரி ஓனர் வேடிய்ப்பன் அவர்கள் கேடியப்பனாக மாறி எங்களை திட்டவில்லை.


இவர்தான் அண்ணன் வேடியப்பன்அப்படியே கேபிளுடன் கிழக்கு பதிப்பகம் சென்று சில புத்தகங்களை வாங்கினோம். கேபிளுடன் சென்றதும் ஒருவகையில் நல்லதாக போய்விட்டது. அவருக்கு கிழக்கில் 30 சதவீதம் தள்ளுபடியாம். அவருடன் சென்றதால் அந்த தள்ளுபடி எங்களுக்கும் கிடைத்தது.

புத்தகம் அடுக்கும் சிராஜும், மேதை ஸ்டில் பார்க்கும் நானும்

இதற்கிடையில் நிறைய ஸ்டால்களில் சிராஜ் வாங்கிய புத்தகங்களை ஒரு கடையில் சேமித்துவைத்திருந்தான். அதையெல்லாம் எடுப்பதற்காக அங்கு சென்றோம். நீண்ட நேரம் நடந்ததால் கால் கடுக்க ஆரம்பித்தது, அசதியாகவும் இருந்தது. அங்கிருந்த ஒரு சேரில் அக்கடா என்று உட்கார்ந்தேன். அங்கு கிடந்த ஏதோ ஒரு மாலை பேப்பரை புரட்டினேன். அதில் ராமராஜனின் மேதை பட விளம்பரம் இருந்தது. அதை பார்த்தேன். வந்தது விணை.

நான் பார்த்த நேரத்தில் அதைப்பார்த்த ராமராஜன் ரசிகர் மன்றத்தின் அறிவிக்கப்படாத தலைவர் சிவாவும், கொள்கை பரப்பு செயலாளர் பிரபாவும் நாளைக்கு இந்த படத்திற்கு போவோம் என்று என்னை அழைத்தார்கள். இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.....

கடந்த முறை நான் சென்னை வந்து சிவாவையும், பிரபாவையும் சந்தித்தபோது, அப்போது வெளியாகியிருந்த உலக சினிமாவான பொன்னர் சங்கருக்கு கதற கதற என்னை அழைத்துப்போய்விட்டார்கள். அப்போது நான் அவர்களுக்குஎந்தக்க்டுதலும் செய்யாமலேயே பழி வாங்கப்பட்டேன்.(கடந்த ஆண்டு நான் பார்த்த ஒரே சினிமா பொன்னர் சங்கர் மட்டும்தான். அந்த படம்பார்த்த அதிர்ச்சியிலேயே நான் வேறு படத்திற்கு போகவேயில்லை. அந்த படத்தின் விமர்சனம் படிக்க இங்கே போகவும். நான் எழுதிய ஒரே சினிமா விமர்சனமும் அதுதான்).

இப்போதும் விட்டகுறை தொட்டகுறையாக, மீண்டும் ஒரு பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்க நினைத்தார்கள் பாவிகள். ஆனால், நான் பிடி கொடுக்கவேயில்லை. ஆரம்பத்தில் நீங்களும் வரவேண்டும் என்று கெஞ்சினார்கள். அது சரிப்பட்டு வரவில்லை என்றதும்  நீங்கள் படம்பார்க்க வரவில்லை என்றால் சென்னையிலிருந்து ஊருக்கு உயிரோடவே போகமுடியாது என்று மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள். படம்பார்க்க வராவிட்டால் மட்டுமல்ல, படம் பார்க்க வந்தாலும், நான் சென்னையிலிருந்து ஊருக்கு உயிரோடு போக முடியாதுதான் என்றேன் அச்சத்துடன். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பாவம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

அதென்னவோ தெரியவில்லை. நான் சென்னை விஜயம் செய்து இவர்களை சந்திக்கும்போதெல்லாம் பொன்னர் சங்கர், மேதை போன்ற உலக சினிமாக்கள் வெளியாகிறது.

அதன்பின் ஒரு பெரிய சவால்  எனக்காக காத்திருந்தது.

(தொடரும்)