புத்தக கண்காட்சியும் பொதி சுமந்த நானும்.....(பாகம்-1)

ரஹீம்  கஸாலி
ஜனவரி 19, 2012 01:20 பிப


 புத்தக கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு நண்பன் வடைபஜ்ஜி சிராஜின் அழைப்பையேற்று வெள்ளிக்கிழமை காலை சென்னையை வந்தடைந்தேன்.
வந்ததும் என்னிடம் இருந்த சென்னை நண்பர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டேன். நான் சென்னை வந்திருக்கும் விஷயத்தைமுதலில் கே.ஆர்.பி. செந்திலிடம் சொன்னேன். மகிழ்ச்சி தெரிவித்த அவர் மாலை புத்தக கண்காட்சியில்தான் இருப்பேன் வாங்க சந்திக்கலாம் என்றார். அடுத்ததாக, மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோரிடம் பேசினேன்.

இன்று வெள்ளிக்கிழமை வேலை இருப்பதால் நாளை பார்க்கலாம் என்றார்கள். சரி, நாம் மட்டும் போவோம் என்று முடிவுசெய்து மாலை கிளம்பினோம். அரங்கை அடைந்தோம்.

அங்கு டிஸ்கவரி புக் பேலசில் நண்பர் கே.ஆர்.பி., கேபிள் சங்கர் ஆகியோர் இருந்தார்கள். . அப்போது கேபிள் நானே உங்களுக்கு போன் செய்ய நினைத்தேன். நீங்கள் வந்துவிட்டீர்கள் என்றார். ஏன் என்றேன் புரியாமல். வரும் வாரத்திலிருந்து உடான்ஸ் நட்சத்திரமாக உங்களை தேர்வு செய்திருக்கிறோம். அதற்காக உங்களை பற்றிய விபரம் வேண்டும் என்றார். சரி என்று சொல்லி அதற்குறிய விதிமுறைகளை கேட்டுவிட்டு சில நிமிடங்கள் அவர்களிடம் உரையாற்றிவிட்டு புத்தக தேடலில் இறங்கினோம்.


சில புத்தகங்களை வாங்கிவிட்டு கிளம்பினோம். அடுத்த நாள் சனிக்கிழமை மீண்டும் அனைவரிடமும் தொடர்பு கொண்டு இன்று சந்திப்போம் என்று நேரம் குறித்தோம்.

இவர்தான் பிராப்ள பதிவர் வடைபஜ்ஜி சிராஜ்


அதன்பின் நண்பர் கவிதைவீதி சௌந்தரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவரும் வேடந்தாங்கல் கருனும் வருவதாக சொன்னார்.

மதிய உணவிற்கு பின் நானும் சிராஜும் கிளம்பி கண்காட்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். அங்கு மெட்றாஸ்பவன் சிவாவும் எங்களுடன் இணைந்துகொண்டார். கவிதைவீதி சௌந்தரை தொடர்புகொண்டபோது முகப்பில் புதிய தலைமுறை மேடை அருகில் நிற்பதாக சொன்னார். அங்கு போய் அவரையும், கருனையும் சந்தித்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது ஓ மனிதா என்று ஒரு குரல், திரும்பிப்பார்த்தால் பிரபாகரன் நின்றிருந்தார்.

சௌந்தர்-கருன்

பிரபா-சௌந்தர்

அங்கு சிறிது நேரம் பொழுதுபோனது. சிவாவும், பிரபாவும் உள்ளே தீராத விளையாட்டு பிள்ளை ஆர்.வி.எஸ் அவர்கள் காத்திருப்பதாகவும் போய் பார்த்துவிட்டு வருகிறோம் என்று கிளம்பினார்கள்.

சிவா- ஆர்விஎஸ்

ஆர்.வி.எஸ்- பிரபாகரன்

நான், சிராஜ், சௌந்தர்,கருன் ஆகியோர் அங்கிருந்து கிளம்பி ஒரு டீ(மாதிரி) குடித்துவிட்டு அரங்கினுள் நுழைந்தோம். நான் சில புத்தகங்களை வாங்கினேன். சிராஜ் வளைத்து வளைத்து வாங்கினான். ஏறக்குறைய பத்தாயிறம் ரூபாயை தாண்டியது பில்.


கருன், சௌந்தருடன் நான்


அடுத்த சில நிமிடங்களில், சௌந்தரும்,கருனும் விடபெற்றார்கள். அடுத்ததாக எங்களுடன் இணைந்தார் மின்னல்வரிகள் கணேஷ் சார்.

பிரபா- கணேஷ்

பின் அவரோடு சுற்றிவந்தோம். அப்போது எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு ஸ்டாலில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் சிவா சில கேள்விகளை கேட்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

பாலகுமாரன்

அவர் கேட்க நினைத்த கேள்விகளில் வில்லங்கம் இருந்ததால் அய்யோ சிவாவிற்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இருந்தாலும் சிவா தன் முடிவில் உறுதியாக இருந்ததால் மகனே உன் சமர்த்து என்று விட்டுவிட்டோம். சிவாவும் தைரியமாக பாலகுமாரனை நோக்கி முன்னேறினார்.

தொடரும்