நரேந்திரமோடி மீது சோ ராமசாமியின் கோபமும், ஜெயாவின் அவசரமும்......

ரஹீம்  கஸாலி
ஜனவரி 18, 2012 01:23 பிப

ஜெயலலிதா- சசிகலா பிரிவிற்கு பின் போயஸ் கார்டனில் எல்லாம் சோ மயமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.சசிகலாவின் இடத்தை பிடித்துக்கொண்டு  கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் ஆலோசகராக சோ செயல்படுவதாகவே தெரிகிறது.

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில், பா.ஜ.க.,ஆர்சியமைக்க முடியாத பட்சத்தில்  ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் சோ, அதுவும் அடுத்த பிரதமர் கனவில் மிதக்கும் மோடியை அருகில் வைத்துக்கொண்டே....இதைகேட்ட மோடி ரசித்திருப்பாரா? நெளிந்திருப்பாரா என்று அவருக்கே வெளிச்சம்.
ஒரு உறையில் இரு கத்தி எப்படி இருக்கமுடியும்?. நரேந்திரமோடி மீது சோவிற்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. இல்லாவிட்டால் மோடியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படி ஒரு குண்டை போடுவாரா சோ....

ஜெயாவை பிரதமராக சோ ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால், அதற்கு தமிழ்நாட்டிலிருக்கும் 39 எம்.பி.க்கள் மட்டும் போதுமா?. மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டாமா?. முதலில் பி.ஜே.பி., ஒத்துழைக்க வேண்டுமே?. தமிழ் நாட்டிலும் அண்ணா.தி.மு.க.,விற்கு 39 எம்.பி.க்கள் மொத்தமாக கிடைக்குமா என்பதே சந்தேகம். 

பி.ஜே.பி.,யில் மோடியை தவிர யாருக்கும் ஜெயா மேல் நல்ல அபிப்ராயம் இருக்காதென்றே நினைக்கிறேன்.ஜெயாவிடம் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றிருப்பார்கள் வாஜ்பாயிம், அத்வானியும்..
யாருக்கும் செலெக்டிவ் அம்னீசியா இருக்காது.

ஒருவேளை இந்தியாவின் பிரதமராக ஜெயா வருவாரென்று என்று வைத்துக்கொள்வோம். என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது?
கடந்த எட்டு மாதங்களாக மின்வெட்டு, பால், பஸ் கட்டணம் விலையேற்றம் என்று தமிழகத்தை கதறவைத்தது போல இந்தியாவையும் கதறவைப்பார் ஜெயா. தன் எம்.பி.க்கள் அனைவரையும் சுழற்சி முறையில் மத்திய அமைச்சராக்கி அழகுபார்ப்பார். இதை தவிர என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது?
ஆனால்,அப்படி ஜெயலலிதா பிரதமராக இருக்கும் பட்சத்தில் ஒன்று மட்டும் நிச்சயம்..... இந்தியாவின் ராஜகுருவாக சோ இருப்பார்./////

----------------

 நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.,வேட்பாளரை அறிவித்திருக்கிறார் ஜெயா. கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் முத்துசெல்வி என்பவரே வேட்பாளரா(க்)கி இருக்கிறார். யாரோடவாவது கூட்டணி வைத்திருந்தாலே அவர்களை மதிக்காமல் முந்திக்கொண்டு வேட்பாளரை அறிவிப்பார் ஜெ. ஆனால், யாரிடமும் இப்போது கூட்டணி இல்லை என்பதால் சொல்லவேண்டுமா?
தேர்தல் ஆனையம் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருக்கும்போதே இவ்வளவு அவசரம் காடியிருக்கிறார் ஜெ....அதுசரி.....தேர்தல் ஆனையம் தேதியை அறிவித்து, வேட்புமனு தாக்கல் முடியும் முன் எப்படியும் ஒரு பத்துபேரையாவது வேட்பாளராக அறிவித்து வழக்கம்போல் மாற்றிவிடுவார் ஜெ.
அதற்கு இப்போதிலிருந்தே ஆரம்பித்தால் தானே சரியாக இருக்கும்?