கண்ணதாசனின் வனவாசமும்- ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலமும்.......

ரஹீம்  கஸாலி
ஜனவரி 16, 2012 11:21 முப


35-ஆவ்து புத்தக கண்காட்சியை திருவிழாவை நடத்தும் BAPASI கூட யாரையும் இப்படி அழைத்திருக்காது, அதை விட அதிகமாகவே என்னை அழைத்தான் பிரபல பதிவர் வடை பஜ்ஜி தள அதிபர் நண்பன் சிராஜ். தினமும் போன் போட்டபடி இருந்தான்.
சரி, புத்தக திருவிழாவிற்கு போவோம் என்று ஒருவழியாக முடிவுசெய்து, வியாழக்கிழமை எங்கள் ஊரிலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். சில புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற பட்டியலுடன்.

வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பின் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். வார நாட்களிலும் கடுமையான கூட்டம். இன்று இணையத்தளங்களில் பல புத்தகங்கள் pdf  ஃபைலாக கிடைத்தாலும், அதையெல்லாம் மீறி, மக்களிடம் வாசிப்பு பழக்கம் இன்னும் குறையவில்லை என்று பார்த்தவுடன் புரிந்தது. அனைவர் கைகளிலும் புத்தகங்களை தாங்கிய பை சின்னதும், பெரிதுமாய்.....
வாசிப்பு பழக்கம் வாழ்க...

அங்கு யார் யாரை சந்தித்தேன் என்று அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

இப்போது, நான் வாங்கிய புத்தகங்களை பார்த்துவிடுவோம்.

1) கல்கியின் பொன்னியின் செல்வன் (ரூ:275)
2) ஆட்டோ சங்கரின் மரண வக்குமூலம் (ரூ:225)
3) சுகா எழுதிய தாயார் சன்னதி (ரூ:180)
4) சுகா எழுதிய மூங்கில் மூச்சு (ரூ: 95)
5) திருநாவுக்கரசரின் இருவர் கதை( எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றியது) (ரூ:65)
6) கேபிள் சங்கரின் தெர்மாக்கோல் தேவதைகள் (ரூ: 50)
7) கண்ணதாசனின் வனவாசம் (ரூ: 120)
8) கண்ணதாசனின் மனவாசம் (ரூ:80)
9) விகடன் வெளியீடான பொக்கிஷம் (ரூ:180)
10) விகடன் வெளியீடான காலப்பெட்டகம் (ரூ:180)
11) யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் (ரூ:50)


கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். (இதை நான் முன்பே படித்திருந்தாலும், தொலைந்துவிட்டது) .அந்த புத்தகம் டிஸ்கவரி புக் பேலசில்(ஸ்டால் எண்: 334) கிடைத்ததில் மகிழ்ச்சி. அதைப்போல ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம். நக்கீரனில் அப்போது தொடராக வெளிவந்து மிகுந்த பரபரப்பை கிளப்பியது. நான் அப்போதே தொடர்ச்சியாக படித்திருந்தாலும், ஒரு தொகுப்பாக இப்போது கிடைத்தது. அதையும் வாங்கிக்கொண்டேன். இந்த இரு புத்தகங்களும்  நான் முன்பே எழுதிக்கொண்டுபோன பட்டியலில் இல்லாதது. 

இன்னும் கொல் சொல்வோம்ல.......



===============================