சபாஷ்....சரியான பதிலடி இதுதான்.....

ரஹீம்  கஸாலி
ஜனவரி 11, 2012 11:37 முப

பக்கத்துவீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
வாராவாரம்
சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....

எதிர் வீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
மாசாமாசம்
வெளியூரு கூட்டிப்போறாரு....

அவங்க ரெண்டுபேரும்
அவங்கவங்க பொண்டாட்டிக்கு
நகையும்,புடவையும் 
வாங்கி குவிக்கிறாங்க...

நீங்க எதுக்குத்தான் 
லாயக்கோ
எனக்குன்னு வந்து
வாச்சிருக்கீங்களே.....
என்று அவ்வப்போது
என்னை திட்டும்
என் மனைவி 
இப்போதெல்லாம் 
 அவர்களைப்பற்றி
வாயை திறப்பதேயில்லை....

எதிர்வீட்டுக்காரரும்
பக்கத்து வீட்டுக்காரரும்
கூட்டணி போட்டு
வேலைக்காரியிடம் 
சில்மிஷம் செய்து
மாட்டிக்கொண்டதிலிருந்து.....

டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...