"சொல்லக்கூடாத உண்மை…" என்ற பாவிற்கான திறனாய்வு

கா.உயிரழகன்
ஜனவரி 05, 2012 08:49 பிப
(tamilnanbargal.com/node/37485)
நண்பன் சுகப்பிரியனின் பாடுபொருள்
நிறுத்துப் பார்க்கப்பட வேண்டிய
நல்ல படைப்புக்குச் சான்று...
யாம் இருக்கப் பயமேன்
எடுத்து விடு நண்பா
பெண்களின் ஆடைகளில் உள்ள
பொட்டுக் கேட்டை மட்டுமல்ல
மக்களாய(சமூக)த்தின் பொட்டுக் கேட்டையும் தான்!
பெண்களே...
மக்களாய(சமூக)த்தின் கண்களே...
அருமையான அழகை பேணுங்கள்
ஆனால்
அழகற்ற உடலை அழகுபடுத்த
பொட்டுக்கள், வெட்டுகள் நிறைந்த
வலை போன்ற ஆடைகளை அணிவது
உங்கள் கற்புக்கு கேடு வருமே!
அடிப் பெண்ணே!
ஆள் பாதி ஆடை பாதி என்பது
ஆளின் அறிவை அழகுபடுத்துவது
அவ்வவ் ஆளின் செயல் பாதி
அவ்வவ் ஆள் அணியும் ஆடைகள் பாதி
(ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் ஆடைகள்)
என்றறிவீர்களா?
பிறந்த உடலை மூடிமறைக்க
அமைத்த ஆடைகளைக் கிழித்து
பிறந்த உடலைக் காட்டும்
போர்வை ஆக்கலாமா?
இத்தனை உண்மைகளை
அவிழ்த்துக் காட்டிய
நண்பன் சுகப்பிரியனைப் பாராட்டுகிறேன்!
இதைவிடச் சிறந்த படைப்புகளை
சுகப்பிரியனிடம் எதிர்பார்க்கிறேன்!
:clap: :clap: :clap: