sugapiriyan's படம்

சொல்லக்கூடாத உண்மை…

சொல்லக்கூடாத உண்மை…
இந்தக் கவிதை சொல்லக்கூடாத ஒரு உண்மை.. பலர் சொல்லத் தயங்கிய உண்மை.. உண்மையில் சொல்லப் பட வேண்டிய உண்மை !

எந்த படைப்பாளியும் தொடுவதற்குத் தயங்குகிற திசை இது.. ஆனால் யாராவது ஒருவர் தொட்டாக வேண்டிய அவசியம் மிக்கதும் இதுதான் !

இதுவரை எனது கவிதைகளுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இந்தக் கவிதைக்குப் பிறகு அப்படித் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம்.. இருந்தால் சந்தோஷம் !

என் வார்த்தைகளில் எங்கேனும் முரட்டுத்தனம் தெரிந்தால் அதற்காய் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்மைத் திமிர் தெரிந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் !

இனி கவிதைக்குள்….

இனிய பெண் தோழிகளே.. நவயுக தேவதைகளே..
நகரும் அருவிகளே.. வளர்ந்த நிலாக்களே..
கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது உங்களுடன்..
கார சாரமாய்..

இனி வருபவை உங்கள் அனைவரைப் பற்றியும் அல்ல..
உங்களில் சிலரைப் பற்றி !

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்
தோன்றுகிறது எனக்கு !

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !

இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !

அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !

ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?

உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?

உங்களின் ஜன்னல்களை
நீங்களே திறந்து வைத்து விட்டு
ஆண்களின் கண்களை மட்டும்
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ?

அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும்
நான் ராமனாக்கவில்லை !

உண்மையில் ராமனே சீதையை சந்தேகித்து
தீயில் இறங்கச் சொன்ன
சராசரி மனிதன்தானே !

இருந்தும் கடந்த சில வருடங்களாக
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை
பாலியல் குற்றங்கள்தான் !

இவை எப்படி நிகழ்கின்றன ?
பத்து வயது சிறுமியை
பலாத்காரம் செய்கிற வன்மம்
எப்படி முளைத்தது ?

உண்மையில் ஊரெங்கும் உலவும்
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும்
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு
பழுதடைகிற நெஞ்சம்..

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
ராட்சச விஷ்வரூபம் எடுத்து
மொத்தமாய் வரம்பு கடந்து
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது !

அத்தனைக்கும் காரணம்
நீங்கள்தானென சொல்லவில்லை..
முக்கியக் காரணமாய் நீங்கள்….

அதற்காய் உங்களை
ஆடைக் கூண்டுகளுக்குள்
அடைந்து கிடக்கச் சொல்லவில்லை..

அநாகரீகமற்ற.. அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப்
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால்
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..

அங்கம் காட்டவில்லை என்பதற்காய்
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை !

அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி
இனி வரும் சமூகத்தை
பாலியல் வக்கிரங்களில் இருந்து
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..

ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!!

இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..

ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை ! ஒரு கவிஞன் சொல்லத் தவித்த கசப்பான உண்மை ! ஒரு படைப்பாளி தன பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !

பலிக்கும் என்ற நம்பிக்கையோடும்..
பிரியமுடன்…
பிரியன்

6.86667
Average: 6.9 (15 votes)
Your rating: None Average: 6.9 (15 votes)

கருத்துகள்

joshi2010's படம்

வணக்கம் நண்பரே, மிக அருமையான


8

வணக்கம் நண்பரே,

மிக அருமையான கவிதை..... சில நேரங்களில் உண்மையைச் சொல்லும் போது கசக்கத் தான் செய்யும்.... ஆனால் தாங்கள் பெண்ணினத்தின் வைத்திருக்கும் மதிப்பு உமது இந்த

"எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!!"

ஒரே வரியில் தெரிகின்றது...... உடலை மறைக்கத் தான் ஆடைகள்... உடலை அழகாய் காட்டுவதற்கல்ல........... நண்பனின் அறிவுரைகள் மிகவும் சிறந்தது........... Clap Clap Clap Clap Clap Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Ponvannan's படம்

மிகவும் துணிச்சலாக‌ ஒரு


8

மிகவும் துணிச்சலாக‌ ஒரு கருத்தை எழுதியுள்ளீர்கள். இந்தியர்க்கென ஒரு பண்பாடு உள்ளது. அதை ஞாபகப் படுத்தியிருக்கிறீர்கள். வரம்பு மீறாமல் உடையணிந்து அழகாக காட்சியளிக்கும் பெண்களும் இருக்கின்றனரே. என்ன செய்வது? இதனை மறந்து விட்ட ஒரு சிலர்தான் மேலை நாட்டு நாகரிகத்தின் தாக்குதலால் சாய்ந்து விட்டனர் . உங்கள் அறிவுரை எதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிரீர்களா?

சிறப்பாக எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துகள்.

sugapiriyan's படம்

என் கருத்துக்கள் மாற்றத்தை


0

என் கருத்துக்கள் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் அவர்கள் செய்யும் தவறை உணர்த்த வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை....உணர்திவிட்டேன் என நினைக்கிறேன்...பிரியமுடன் பிரியன்

vinoth's படம்

(No subject)


9

Clap Clap Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

"சொல்லக்கூடாத உண்மை…" என்ற


10

"சொல்லக்கூடாத உண்மை…" என்ற பாவிற்கான திறனாய்வு
URI: http://tamilnanbargal.com/node/37497


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

அழகின் இரகசியம் காட்டி ஆளை


6

அழகின் இரகசியம் காட்டி
ஆளை விரசத்தில் தள்ளும்
ஒரு பரம இரகசியம் உள்ளடக்கி
பண்பாட்டின் பயன்பாடு பாவாகி
கலாச்சார சீரழிவை சுட்டிக்காட்டி
தசையும் நரம்பும் இரத்தமும் கூடிய‌
நாற்றமெடுக்கும் மானிட உடலுக்கு
மானம் மறைக்க உடையெனவாகி
அவ்வுடை அரையெனவாகி விரசம் காட்ட‌
அடுத்தவர் சொன்னால் வக்கிர புத்தியாகி
கோபத்தில் கண் சிவந்து கொடிபிடிக்கும்
மாதர் சங்கம் தோலுரித்து பக்குவமாய்
அடுத்தவர் மனம் நோகாது காரியக் கவி
சுகப்பிரியன் சுட்டியது சில சூர்ப்பனகைகளை
சீதையென இருப்போரும் சீரழியாமலிருக்க‌
நல்லதை தன்நடையில் பா எழுதி
நங்கையருலகம் நலிவடையாமலிருக்க கவலையுற்று
நல்லதைச் சொன்னவருக்கு நல்லதொரு நன்றி!

sugapiriyan's படம்

நான் என்றுமே பெண்களை குறை


0

நான் என்றுமே பெண்களை குறை கூறியதில்லை நண்பரே...ஆனால் அவர்களின் ஆடை மோகம் ஒரு ஆணின் காம எண்ணங்களை தூண்டுவதாக அமைய கூடாது...பெண்களே கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள்....நான் அதற்காக உங்களை பாவாடை ,தாவணியில் வளம் வர சொல்லவில்லை ....அழகாய் அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்... Sad Sad Sad

manik's படம்

அங்கம் காட்டவில்லை


5

அங்கம் காட்டவில்லை என்பதற்காய்
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை !

Clap Clap Clap

domnik's படம்

அருமை நண்பரே சிலர்


1

அருமை நண்பரே சிலர் சொல்லத்துடிக்கும். அதை எப்படி சொல்லத் தெரியாத, நிலை அதை இப்படியும் சொல்லலாம், என்று சொல்லிய உங்களுக்கு நன்றி!

rlalitha's படம்

(No subject)


5

Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
ரா.லலிதா குமாரி


selvakumaar's படம்

மிகவும் அருமையான கருத்து.


8

மிகவும் அருமையான கருத்து. இக்காலத்து இளைஞிகள் அனைவரும் இதனை படித்து உணர வேண்டும். நாம் வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம். நமக்கு மாற்றம் வேண்டும் என்பது உண்மை தான் ஆனால் நமக்குக்கென்று ஒரு பண்பாடு உண்டு. ஆனால் இன்றைய தமிழகத்தில் இளையோர்கள் செய்கின்ற செயல்களைப்பார்க்கும் போது எனக்கு கோபமும் ஆற்றாமையும் ஏற்படுகிறது. மென்பொருள் துறையில் அவர்களுக்கு அதிகப்படியான பணம் அதிசீக்கிறமாய் கிடைப்பதினால் அவர்கள் செயலும் வெகு வேகமாய் மாறிவிடுகிறது. இன்று இளைஞிகள் டீ சர்ட் எனப்படும் ஆயத்த ஆடைகளை அணியும் முறை ஐயோ? நண்பர் கவிதயில் சொன்னது போலைவிடவும் சற்று அதிகமாகவே காணமுடிகிறது. பணம் அதிகமாக சம்பாதிக்கிறாள் என்ற காரத்திணால் சில பெற்றோர்களினால் அதனைத் தடுக்க முடியவில்லை. பணக்கார வர்க்கத்தினர் தங்களது செல்வ செழிப்பைக் காட்டுவதற்காக இது போன்ற ஆடைகளை தங்களது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கிண்றனர். அதிகப்படியனா செல்லம், செல்வம் அவர்கள் வாழ்க்கையும் அழிப்பதுடன் இல்லமல் நமது பண்பாடையும், கலாச்சாரத்தையும் அழிக்கின்றது. முன்பெல்லாம் பெண்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே வர பயப்படுவார்கள் ஆனால் இப்பொழுது அவர்கள் hotel, bar. ல் party. என்ற பெயரில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு அளவே இல்லை. நான் 100 விழுக்காடு என்று கூறவில்லை. 90 விழுக்காடுக்குமேல் அதிகம் என்று கூறுகிறேன். தினமும் தொடர்வண்டியிலும், பேருங்துகளிலும் ஆண்களும், பெண்களும் செய்யும் சேட்டைகளைப் பார்க்கும்போது மனம் நொந்து போகிறேன். பள்ளி மாணவர்களையும் இப்பழக்கம் விட்டுவைக்கவில்லை. இதனை காணும்போது எதிர்கால தமிழ் சமுதாயம் எப்படி இருக்குமோ என்று ஐயுருகிறேன்.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்