என் இனியவளே,
நான் உன்னை
திருமண மான நாட்முதல்
மனைவியாய் அல்ல
காதலியாய் எந்தன்
தோழியாய் எந்தன்
குழந்தையா யெண்ணித்
தானடி உன்னை
என் உயிருக்குள் உயிராக
நேசித்தேன்........
காதலித்து திருமணம்
முடித்தவர்களா என்று
நட்பும் உலகமும்
பொறாமைக் கண்கொண்டு
பார்க்குமளவு வாழ்ந்தோமடி......
என் அன்பிற்கு
வானமே எல்லையென்று
நம்பி உன்னை
நேசித்தேன் காதலித்தேன்
ரோஜா தோட்டமாய்
வளர்த்த வாழ்ந்த
நம் வாழ்வில்
சூறாவளியாய் புயலாய்
நின் தகப்பனின்
சுயநலம் வந்ததடி........
காலத்தின் கோலத்தால்
உனது குடும்பத்தால்
நான்பட்ட
நிந்தைகள் அவமானங்கள்
பலப் பல.....
ஊர்க் கூட்டி உன்னை
திருமணம் செய்தேன்...
அதற்கு பழியாக
ஊர் பழிக்க
என்னையும் குடும்பத்தையும்
காவல் நிலையம்
அழைத்துச் சென்றார்
உன் தகப்பன்........
காவல் நிலையத்திலும்
உன் தகப்பன்
தன் சுயநலத்தை மட்டுமே
வென்றெடுக்க
அடுகடுக்கான பொய்கள்
கட்சி ஆதரவுடன்.............
உனக்கு காலையில்
காப்பி போட்டு
மிஸ்டு கால் கொடுத்து
எழுப்பும் என் அன்னையை
வார்த்தைகளினால் காவலர்
சுட்டப் போதும்
புன்னகையுடன் நின்
குடும்பத்தாரும் நீயும்......
இதனால்
எனது குடும்பமும்
தலைக் குனிந்தது........
உற்றாரும் உறவினரும்
என் பின்னால்
நான் கேட்கும் படியே
ஏளனம் பேசி பேசி
என்னை
கேலிப் பொருளாக்கினர்.........
நாம்
நலமுடன் வளமுடன்
வாழ்கவென்று வாழ்த்திய உறவு
இந்த உறவே.....
வேண்டாமென்று சொல்லி
நம் உறவை
உடைக்கவும் சொல்லியது
ஆத்திரத்தில் அவசரத்தில்
அதையும் நான் செய்தேன்.....
ஆனாலும்...........
நான் உன் மீதுக் கொண்ட
காதலினால் அன்பினால்
அதையும் உடைத்து
என் தாயை
பேசிய சுடு
சொற்களையும் மறந்து
உன்னுடன் வாழ
உன்னுடன் மட்டும் வாழ
என் குடும்ப கூட்டை
உடைத்துக் கொண்டு
அன்னையை அனாதையாக்கி விட்டு
வெளியில் வந்தேன்.........
நீயோ நன்றாகத்
தான் வாழ்ந்தாய் என்னுடன்
ஆனாலும் உந்தன்
தகப்பனின் ஆலோசனைப்படி........
நான் உன்மீது
அளவற்ற அன்புக் கொண்டேன்
ஆனால் நீயோ....
காசு தான் உலகம் என்றாய்..........
பாசம் தான் உலகம் என்றேன்
ஆனால் நீயோ
வேஷமாய் தான் வாழ்ந்தாய்
என்னுடன் என்னை நம்பாமல்
உன்னிடம் தாயன்பை
எதிர் பார்த்தேன்.....
ஆனால் நீயோ
உந்தாயை நேசித்து
என்னை அவமானப் படுத்தினாய்........
அன்பின் மிகுதியில்
நானிருக்கும் போதும்
உன் சுயநலத்தோடு
உந்தாய் வீட்டிற்கு
போவதற்கு அனுமதி கேட்பாய்......
என்னதொரு கொடுமை..........
உன்னிடம் கிடைக்காத
பாசத்திற்காய் அன்பிற்காய்
நான் மதுவினை
நாடினேன்......
என் மனதையும்
மரக்கச் செய்து
மதுவின் போதையில்
உன்மீது கொண்ட
அன்பை விட
உன் தகப்பன் மீதான
கோபத்தையும் உன்னிடம் காட்டினேன்.......
அதனையும் நீ புரியாது
என்னை
மீண்டும் மீண்டும்
சுடு சொற்களால் என்னை
வதைத்தாய்........ நானோ
எந்தன் உயிரையே
எந்தன் அன்பையே
அடித்தேன் ... அடித்தேன்.....
அதனால் நானே
என் மீதே
வெறுப் படைந்தேன்................
உன்னை எவ்வளவு
நேசித்தேனோ
அதை விட அதிகமாய்
உன் குடும்பத்தை
வெறுத்தேன்..............
ஆனால் நீயோ
நானில்லாத போது
வீட்டைக் காலி செய்துவிட்டு
உன் தகப்பனாருடன்
சென்று விட்டாய்..........
உனக்கோ என் மீதுக்
கோபம்.... உன்
தகப்பனுக்கோ
தன் சுயநலம்
ஜெயிக்க மீண்டுமொரு
வாய்ப்பு என்றினைத்து
அழைத்து சென்று விட்டார்........
நான் மீண்டும்
உறவையும் நாட முடியாமல்
நட்பையும் நாட முடியாமல்
இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன் காத்திருக்கின்றேன்.....
என் இல்லறமே,
நீ என்னருகில்
இருக்கும் போது
உந்த னருமை
எனக்குத் தெரியவில்லை........
நீ என்னை விட்டுச்
சென்றவுடன்
நீ என்னை விட்டு
விலகிடுவா யொயென்று
என்னுயிர் என்னை
வதைக்கின்றது............
இன்று நான்
உதடுகளில் சிரித்தப் படி
வாழ்ந்தாலும்
உள்ளத்தில் நின் பிரிவால்
மரண வேதனையில்..........
காதலுக்குள்
ஊடல் வரலாம் ஆனால்
பிரிவு கூடாது
அன்பே.........
நின் தகப்பன் மீதான
கோபத்தில் என்
சொற்களால்
உன்னை வதைத்தேன்.....
அடிகளால்
உன்னை சிதைத்தேன்.......
அப்போது நான்
எண்ண வில்லை.........
நான்
வதைப்பதும் சிதைப்பதும்
என்மீது நீ
கொண்ட நேசித்த
அன்பையென்று...........
உன் தகப்பனை
நேசிப்பது தவறல்ல
ஆனால் அவர் செய்யும்
தவறினை எண்ணத்தினை
நீ உணரா திருப்பது தவறு.......
ஒரு நிமிடம்
எனக்காக என்னை நினைத்து
நம் வாழ்வைக் குறித்து
நீ முடிவெடு..........
உன்னைப் பெற்றவரே யானாலும்
நம் வாழ்வின் முடிவை
அவர் கையில் தராதே..........
பிறந்த புத்தாண்டில்
நான் என் தவறினை
உணர்ந்து விட்டேன்..........
நின் குடும்பம்
செய்த தவறினை
மன்னித்து மறந்து விட்டேன்............
நாம் தொடர்வோம்
நம் இல்லற பயணத்தை
அன்பு காதல் துணைக் கொண்டு......
நீயில்லாமல் நான்
உயிரில்லாத வெற்றுடல் தான்.........
மழையில்லாத மேகம் தான்......
மணமில்லாத மலர் தான்........
என் மீதான
கோபம் குறைய
ஆண்டுகள் பல ஆனாலும்
உனக்காக
காத்திருக்க தயார்......
அதை நீ எனக்குச் சொல்.......
உன் தகப்பனல்ல.......
நம் இல்லறத்தை
பிரிக்கும் உரிமையை
யார் அவர்க்கு கொடுத்தது?????
இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன்
பல ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கின்றேன்.....
உன்னுடன் மீண்டுமொரு
வசந்த வாழ்க்கை வாழ்
உன்னை நேசிக்க
உன்னை காதலிக்க
உன்னை சேயாய் கவனிக்க
உன்னுடன் தோழனாய் நட்புகொள்ள
உன் கணவனாய்
உன்னை
அணைத்திடவும் அரவனைக்கவும்..............
உலகமே எதிர்த்தாலும்
உன்னுடன் காதலாய் வாழ
என்னை நானே
தயார் படுத்திக் கொண்டேன்...........
எந்தன் அன்பே
உன்னிடம்
நான் **நோக்குவது
என்மீது தூய அன்பும்
நல் நட்பும்
நல் இல்லறமும்
என்னை நம்பும்
என்னை நேசிக்கும்
பெண்ணொருத்தியாய்
புத்தாண்டில் புதியவளாய் வா......
என்னுடன் வாழ
விரைவில் வா...........
இல்லையேல்
நீயே புன்னகையுடன்
உந்தன் கரங்களால்
விஷம் தந்து செல்..........
என் வாழ்வினை
ஆரம்பிக்க வா
அல்லது
என் வாழ்வினை
முடிக்க வா............
(** நோக்குவது : எதிர்பார்ப்பது என்ற அர்த்ததில்.....)
=====
என் மனைவியை துன்புறுத்த வேண்டும், அவளைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று என் கனவிலும் நான் நினைக்கவில்லை.........
என் மனைவியைப் பற்றி நான் எழுதிய கவிதைகள் வெறும் எழுத்துக்கள் அல்ல.... அவை என் இதயத்தில் அவளை நேசித்த அன்பின் சிறு பகுதி.....
என் மனைவி :
http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF
அவளின் பிறந்த நாளுக்கு எழுதியது.......:
என் அம்மாவின் ஆதங்கம் :
சிறு விண்ணப்பம் :
நானும் என் மனைவியும் இப்போது பிரிந்து உள்ளோம்........விரைவில் நாங்கள் இருவரும் சேர்ந்து புதிய வாழ்க்கை வாழ தமிழ் நண்பர்கள் அணைவரும் இறைவனிடம் வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.......
கருத்துகள்
நண்பரே ஊழ்வினை உமது வாழ்வினை
நண்பரே ஊழ்வினை உமது வாழ்வினை சோதிக்கும் போது மனம் தாழ்வினை நோக்கிச் செல்லாது உறுதிகொண்டு பிரிவினையால் வரும் துன்பத்தை பொறுமை எனும் சக்தி வாளால் அறுத்து வெற்றி காண்பீர். அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்: பொறுமைதான் வாழ்க்கையில் வெற்றி தரும் ஆயுதம். கலக்கம் வேண்டாம். கலங்கினால் சிந்தனை தெளிவு பெறாது. எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையா. எனவே அமைதி காப்பீர். தியானத்தில் அமர்ந்தால் தீர்வு கிடைக்கும். நானும் உங்களுக்காக என் அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன்.
நண்பரே உண்மையில் என் மனம்
நண்பரே உண்மையில் என் மனம் வேதனையில் துடிக்கின்றது!
கவிதையின் மூலம் தூது விட்டுள்ளீர்கள், கண்டிப்பாக இறைவனிடம் நாம் பிரார்திப்போம் மீண்டும் தாங்கள் இருவரும் இணந்து பெரும் மகிழ்வுடன் வாழ்க்கையைத் தொடங்குவீர் அதற்கு இறை துணை புரியும்.
எப்போது தான் செய்த தவற்றை ஒருவர் உணர்ந்து விட்டாரோ அப்போதே அவர் கடவுளாலும் மனித நேயத்தாலும் மன்னிக்கப்பட்டவர் ஆகிவிடுவார், தாங்களும் அப்படியே!
அப்படி உணர்ந்தவரை மன்னிக்கும் மனநலம் கொண்டு அன்புடன் அரவணைப்பது தான் உத்தமர்களுக்கு உத்தமம்.
குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் யார் வெற்றி பெறுகின்றோம் என்பதை விட யார் தோல்வியுறுகின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றாவராவார்கள்,
ஒரு பெண் திருமணம் ஆகும் வரை தான் பிறந்த வீடு திருமணம் ஆன பின் இறக்கும் வரை புகுந்த வீடு தான் பாதுகாப்பு, அதற்காக அவள் அடிமையில்லை, அதே சமயத்தில் அவள் அந்த வீட்டின் குடும்ப விளக்கு என்பதை அவளும், புகுந்த வீட்டாரும் நினைவில் வைக்க வேண்டும்,
குடும்ப வாழ்க்கைக்கு பணம் வேண்டும், ஆனால் பணம் தான் குடும்பத்தை தீர்மானிக்க வேண்டும் என்பது கலகத்திற்கு முதல் படி,
தங்களது துணைவியாருக்கு எது உண்மை என்பது இதுவரை தெரியவில்லை, எத்தனை ஆண்டுகள் பெற்றோர்கள் அவருக்கு எல்லாம் செய்வார்கள் அதற்கடுத்து யார் என்பதை தங்கள் துணைவியார் எண்ணவில்லை,
ஏன் நாளை அவரின் பெற்றோர்களே தங்களின் துணைவியாரை வாழாவெட்டி எனும் சொல்லுக்கு ஆளாக்கும் இது தங்களின் துணைவியாருக்கு புரியவில்லை, அதை அவருக்கு எடுத்து சொல்ல சரியான புத்திசாலிகள் அவருடன் இணையவில்லை என்றுதான் அர்த்தம்,
எந்த பெற்றோர்களும் தன் பிள்ளைகளின் வாழ்க்கையை வீணாக்க நினைப்பதில்லை, ஆனால் பிள்ளைகளின் பொய் சொல்லுக்கு அவர்கள் ஆராயாமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு நாளை பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகி விடுமே என்பதை எண்ணுவதில்லை, குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு
சில மனைவிமார்கள் கணவன் தங்கள் மீது அதிகம் பாசம் வைத்துள்ளதை தவறாக எடைப்போடுவதும் இது போன்ற தவற்றிற்கு வழிவகுத்துவிடும்,
பெண்ணுக்கு பொருமை மிகவும் அவசியம், அதனால் அவர் ஆணுக்கு அடிமையில்லை, சுதந்திரம் என்ற பெயரில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு அவரது எதிர் காலம் அதாவது மூப்பெய்தும் போது அவரை கவனிக்கவோ ஆதரிக்கவோ யாரும் உதவாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார் என்பதை அவர்கள் உணர வேண்டும்,
இளமையும் அழகும் இருக்கும் வரை தான் பெண்ணுக்கு மதிப்பு, என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வயதானால் அது அவருக்கும் சொந்தமில்லை என்பதை அவர் உணர சொல்ல வேண்டும்,
கண்டிப்பாக தங்களது துணைவியாரின் தந்தையார் மனைவி சொல்லுக்கு அடிமைப்பட்டவர் என்பதைத் தான் காட்டுகின்றது,
எனவே எது எப்படி இருந்தாலும் ஏதாவது முறையில் தங்களது மனைவியை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி அவரிடம் மனம் விட்டு பேசுங்கள், செய்த தவற்றை உணர்ந்து விட்டதாகவும் மீண்டும் வாழ்க்கை வளம் பெற இருவரும் இணைவோம் என்பதையும் கூறி அவரை தங்களது இல்லம் அழைத்து வர முயற்சி செய்யுங்கள்,
தங்களது மனைவிக்கு விருப்பப்பட்ட பொருட்களை அத்தருனத்தில் அளித்து விட்டு பேச்சைத் தொடருங்கள், அதனால் தவறொன்றுமில்லை எல்லாம் இனிமையாக வெற்றி பெறும்,
இவ்வளவும் தாங்கள் சொல்லியும் பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு மாற்று மருத்துவம் உள்ளது, அதை தங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ்ஜாக அனுப்புகின்றேன்,
வாழ்க்கை என்பதே போராட்டம் தான், அதில் எதிர் நீச்சல் போட்டு கரையை அடைய வேண்டுமே தவிர, தோல்வி என்று மூழ்கிவிடுவதால் மனித பிறப்பெடுத்ததிற்கு அர்த்தமில்லை,
வா வாழ்ந்து பார்ப்போம், வாழ்ந்து காட்டுவோம் என்ற தீர்க்கமான முடிவு தான் வெற்றியைத் தரும்,
துணிந்து திறம்பட செய்து வெற்றி பெறுங்கள், நால்வர் சொல்லும் நல்லதை மட்டும் கவனமாகக் கேளுங்கள்,
தங்கள் மனைவியை சந்திக்க தாங்கள் மட்டும் தனியாகவே செல்லுங்கள், எதற்கும் கலங்காதீர்கள், யாரை நம்பி யாரும் உலகில் பிறக்கவில்லை
எதுவாக இருந்தாலும் துணிச்சலாக இருங்கள், எல்லாம் நல்லதாக நடக்கும், மனம் சோர்ந்தால் செயல் தாமதப்படும்
என்றும்:சுஷ்ருவா
(நான் நட்பின் காரணமாகத் தான் இவ்வளவும் எழுதியுள்ளேன் ஏதேனும் தவறிருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்)
வழக்கமானதொரு காதல் கவிதை என
வழக்கமானதொரு காதல் கவிதை என படிக்க ஆரம்பித்த போது....
வாழ்வின் நிஜங்கள் பல இடங்களில் தன் பாதையை தானே வகுத்துக்கொண்டு சென்றிருக்கிறது.
பிரச்சனையை கொஞ்சம் ஆறவிட்டு தங்களை மனைவிக்கு பிரச்சனையை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
நிஜக்காதல் தோற்பதில்லை.
நிஜக்காதலே பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்.
நாங்களும் பிரார்த்திக்கிறோம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
உன் நினைவுகள் என் நினைவாகவே
உன் நினைவுகள் என் நினைவாகவே இருக்கிறது..!
ஆனால்
உனக்கு என் நினைவுகள்
உன் நினைவில் கூட வருவது இல்லை
தமிழ்.ர தங்கள் இதனால் தான் என் கவிதையை இரசித்திரோ..........கவலை வேண்டாம் உங்கள் காதல் அவர்களின் மணதை மாற்றும் நண்பா............
R.tamil











