2011 ஆம் வருடத்தில் நான்
கடந்த 2011 உங்களுக்கு எத்தனையோ ஆனந்தங்களையும், அனுபவங்களையும், பரிசுகளையும், பாடங்களையும் தந்திருக்கலாம். அதை நினைவூட்டிப்பார்க்க இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளவோம்.
கீழே தரப்பட்டவைக்கு உங்கள் பதிலை எழுதி உங்கள் வலைதளத்தில்/இணைய தளத்தில் பதிய வேண்டுகிறோம். பதில் சொல்ல விரும்பாதவற்றை விட்டுவிடுங்கள். (அல்லது இவற்றை நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்)
- நீங்கள் மிகவும் மகிழ்ந்த தருணம்
- உங்களை மிகவும் பாதித்த நிகழ்வு
- உங்களுக்கு தெரியாமலேயே கண்ணீர் விட்ட தருணம்
- உங்களுக்கு தெரியாமலேயே ஆனந்த கண்ணீர் விட்ட தருணம்
- நீங்கள் மிகவும் மகிழ்வித்த நபர்
- உங்களை மிகவும் மகிழ்வித்த நபர்
- நீங்கள் மிகவும் துன்பப்படுத்திய நபர்
- உங்களை மிகவும் துன்பப்படுத்திய நபர்
- நீங்கள் அதிகம் கோபப்பட நபர்
- உங்களை அதிகம் கோபப்பட வைத்த நபர்
- நீங்கள் அதிகம் வெறுப்பேத்திய நபர்
- உங்களை அதிகம் வெறுப்பேத்திய நபர்
- நீங்கள் அதிகம் கிண்டலடித்த நபர்
- உங்களை அதிகம் கிண்டலடித்த நபர்
- நீங்கள் மிகவும் இரசித்த முகம்/நபர்
- நீங்கள் மனப்பூர்வமாக நன்றி சொல்ல விரும்பும் நபர்
- நீங்கள் வாழ்க்கையில் இழக்க விரும்பாத நபர்
- நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என விரும்பும் நபர்
- நீங்கள் சாதிக்க நினைத்து சாதித்துவிட்டதாக நினைப்பது
- நீங்கள் சாதிக்க நினைத்து சாதிக்க இயலாமல் போனது
- எதிர்பாராமல் கிடைத்த அதிர்ஷ்டம்
- அதிர்ஷ்டம் கிடைக்கும் என நினைத்து ஏமாந்தது
- மிகவும் அதிகம் இரசித்த இயற்கை காட்சி/இடம்
- மிகவும் அதிகம் இரசித்த பாடல்/வரிகள்
- மிகவும் அதிகம் வெறுத்த பாடல்/வரிகள்
- மிகவும் அதிகம் இரசித்த படம்/காட்சி
- மிகவும் அதிகம் வெறுத்த படம்/காட்சி
- மிகவும் அதிகம் இரசித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி
- மிகவும் அதிகம் வெறுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி
- மிகவும் விரும்பி வாங்கிய பொருள்
- மிகவும் விரும்பி இழந்த பொருள்
- மிகவும் விரும்பி வாங்கி சாப்பிட்ட உணவு
- மிகவும் விரும்பி வாங்கி உடுத்திய ஆடை/அணிகலன்
- மிகவும் விரும்பி வாங்கி படித்த நூல்
- மிகவும் விரும்பி படித்த வலை/இணைய பதிவு
- உங்களை நீங்களே வெறுப்படைந்த தருணம்
- உங்களை நீங்களே புகழ்ந்த/பெருமையடைந்த தருணம்
- நீங்கள் செய்து மற்றவர்களால் புகழப்பட்ட வேலை
- நீங்கள் உங்களுடன் விவாதம் செய்வோருடன் ஒத்துப்போன கருத்து
- நீங்கள் பலதடவை விவாதித்தும் மற்றவர்களால் ஏற்கப்படாத கருத்து
- இந்த வருடத்தை உங்கள் வாழ்க்கையில் மறக்காமல் செய்த நிகழ்வு
- கடைசியாக, நீங்கள் இந்த வருடத்தில் கற்ற பாடம்
அனைவருக்கும் 2012 நல்ல மகிழ்ச்சியான அனுபவங்களை தர வாழ்த்துகள்!