பாகற்காய் வருவல்

NIRMALA
டிசம்பர் 07, 2011 03:55 பிப

தேவையான பொருட்கள்

சிறு துண்டுகளாக நறுக்கிய பாகற்காய் அரை கிலோ
வெங்காயம்‍‍ ‍மூன்று
த‌க்காளி இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி,
கடுகு ‍சிறிது
மிளகாய் தூள் 2 தே.க (காரத்திற்கு ஏற்றவாறு)
ம.தூள் 1/2 தே.க
உப்பு தேவையான அளவு
எண்ணெய்‍ 5 தே.க (எண்ணெய்யால் மட்டுமே வருக்க வேண்டும்)

தயாரிக்கும் முறை

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொர்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமானதும் , தக்காளி போட்டு நன்கு வதங்கி கூட்டானதும் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வதக்கனும்.(இல்லையென்றால் அடி பிடித்து விடும்)
5 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு வாடை போனதும் சிறு துண்டுகளாக நறுக்கிய பாகற்காய்யை சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளரி ஒரு தட்டு போட்டு மூடவேண்டும். 5 நிமிடம் கழித்து தட்டை திறக்க வேண்டும்(உடனே திறந்தால் மிளகாய் தூள் வாசனை இருக்கும்). 5 நிமிடம் கழித்து திறந்து நன்கு கிளறி சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாகற்காய் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அனைத்து விடவேண்டும்......

இந்த பாவற்காய் வறுவல் சாம்பார், ரசம், குர்மா, சப்பாத்தி ஆகியவைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும். :eat: :eat: