எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்

தமிழ்
டிசம்பர் 02, 2011 11:27 முப

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்

இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ஆகும்.

இதன் மேல் தோலை மட்டும் மருத்துவத்திற்கு எடுத்து பொடித்து சூரணமாக ஆக்கி நெய்/தேனுடன் சேர்த்தோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்துவார்கள்.

கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

ஒருவருக்கு மலம் போகாமல் மலச்சிக்கல் நோய் வரும் போது மலமிழக்கியாக எட்டு கடுக்காயை சூரணம் செய்து கொடுத்தால் மலவரத்து சீராகும். இதுவே பிள்ளை பெற்ற தாய்க்கும் மருந்தாக பயன்படும்.

எரு = கழிவு = மலம்