இந்தியர்களை அவமானத்திற்கு உட்படுத்துவது உலகில் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது, அவை இலை மறைக் காயாக இருக்க,
ஆனால் அமெரிக்கா எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் இந்தியாவின் மூத்தக் குடிமகனும் முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களை இருமுறை உதாசீனப்படுத்தியுள்ளது, எதைக் குறிக்கின்றது?
முதல் தவறு 2009ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது மத்திய ஆட்சியில் அப்போது இருந்ததும் காங்கிரஸ் பேரியக்கம் தான், 2011இல் நடத்தப்பட்ட போது அப்போது இருந்த காங்கிரஸ் பேரியக்கம் தான் இப்போதும் உள்ளது,
என்னே ஒரு நாட்டுப்பற்று கொண்ட பேரியக்கம், ஒரு நாட்டின் மூத்தக் குடிமகனுக்கே இவ்வளவு அவமானம் ஏற்பட்டும் அப்போது இந்த அரசு கேட்கத் தவறியதின் விளைவு இரண்டாவது முறையும் அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் நமது இந்தியத் திருநாட்டின் ஒப்பற்ற விஞ்ஞானியும் நாட்டுப்பற்றாளரும் மூத்தக் குடிமகனுமாகிய இந்தியக் குடியரசுத் தலைவர்,
எப்படி இந்தத் தவறு நடந்தது? அதற்கு யார் காரணம்? இவைகளுக்குப் பதில் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தானே!
ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவருக்கே இந்த நிலைமையென்றால் மற்றவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்,
2009ல் நடந்த சம்பவத்திற்கு மத்திய அரசும் காணாதது போல் விட்டு விட்டது, பொது மக்களாகிய நாமும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டோம்,
கற்பழிப்பு,கள்ளக்காதல்,கொலை இவைகளை முதல் பக்கத்தில் போட்டு நாட்டிற்கு துரோகம் செய்பவர்களை நீதிமன்றத்திலேற்றியவுடன் வரிந்துக் கட்டிக்கொண்டு பத்திரிக்கையின் ஒரு மூலையில் தேடிப் படிக்கும்படி செய்யும் பத்திரிக்கைகளும் கண்டும் காணாமல் விட்டு விட்டதே ஏன்?
தற்போது பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகள் போல் பணம் பண்ணுவதில் மும்மரமாக இருப்பதைத் தானே இது காட்டுகின்றது!
இன்று மத்திய அரசிற்கு சிறுபுத்தியில் தோன்றியுள்ள கண்டனக்குரல் எண்ணம் அப்போது ஏன் வரவில்லை, பொது மக்களும் ஏன் தமது கண்டணத்தைக்காட்டவில்லை
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்திகளும் ஒரு நடிக நடிகைக்கு காலில் அரிப்பு வந்தால் அதை முதல் பக்கத்தில் படத்துடன் போட்டு அதற்குக் கருத்து தெரிவிக்க இரண்டு உருப்படாத கழுதைகளின் விமர்சனமும் போட்டு வியாபாரத்தில் தனது உத்தியைக் காட்டுகின்றது, அப்படி அவைகள் செய்ய நமது மேன்மை தாங்கிய பொது மக்களும் காரணம் தானே!
அக்டோபர்29/2011 இல் நடந்த சம்பவம் தற்போது தான் செய்தியாக வெளி வந்துள்ளது, இதுபோலுள்ளச் செய்திகளை உடன் அரசு வெளியிடாதக் காரணம் என்ன? சில பிரச்சனைகள் வரும் என்ற காரணத்தை முன்வைக்க அரசு முற்பட்டால், தற்போது ஏன் வெளியிட்டது என்ற கேள்வியும் தொடருமல்லவா?
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தூதரகமுண்டு அதில் தூதருமுண்டு அப்படியிருக்க,அமெரிக்கவிலுள்ள இந்திய தூதர் என்ன செய்து கொண்டிருந்தார்?
(தூதரை)அவரைக் கேள்வி கேட்கும் உரிமை யாருக்கு உண்டு? அப்படி கேள்விக் கேட்கும் உரிமையுள்ளவர் அந்த நாட்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? அவ்வுரிமையுள்ளவரை அப்பதவியிலமர்த்தியது யார்?
அப்பதவியிலவர் அமர வக்களித்தது யார்? வாக்களித்தவர் எந்த அடிப்படையிலவருக்கு வாக்களித்தார்? வாக்களித்தவர் கேள்வி கேட்க இயலுமா என்றால் இயலாது, எனவே இந்தியர்களே ஏன் சுதந்திர இந்தியாவில் வாழ்கின்றீர்கள்? என்று அமெரிக்கா கேட்பது போலுள்ளது!
இனிமேலும் இதுபோலொரு சம்பவம் நடக்காமல் இருக்க மத்திய அரசு வழி செய்ய வேண்டும், அப்படி நடந்தால் அதற்குண்டான கண்டனத்தையும் அந்நாட்டுடனான தொடர்புகளை விட்டெறியக் கூடிய கௌரவத்தை இந்தியா பெற வழி செய்ய வேண்டும்.
பொது மக்களே நாம் செய்யும் தவறு நம்மைச் சுடும் என்பதை நினைவில் வைத்து நம்மை ஆள்பவர்களை ஆட்சியிலமர்த்துங்கள், இனிமேலும் கௌரவமானவர்கள் இந்தியர்கள் என்ற பெருமைக் கொள்ள நல்லாட்சி மலர வழி செய்யுங்கள்!
இந்தியர்கள் சார்பாகவும் நானும் ஒரு இந்தியக்குடிமகன் என்ற வகையிலும் எமது இந்திய மக்கள் சார்பாக எமது நாட்டின் மூத்தக் குடிமகனும் இந்தியர்களின் மரியாதைக்குறியவருமான எமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களை உதாசீனப்படுத்திய அமெரிக்காவிற்கு எமது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்!
வாழ்க பாரதம்! வளர்க பாரதத்தின் புகழ்!
ஜெய்ஹிந்த்!
- rajudranjit's blog
- Login or register to post comments
- 251 reads






