Skip to main content

என் அழகி ஒரு கறுப்பி

URI: http://tamilnanbargal.com/node/36665
கருத்துகள்: 30Likes: 31604 views

என் அழகி ஒரு கறுப்பி

vinoth's படம்

நிறத்தை பேதம் பார்த்து
வெள்ளையை வெறுத்து பேசி
பெண்ணடிமை தத்துவம் பேசி
காதலிக்கு மட்டும் வெள்ளை தோலை தேடிபார்த்து
நாயாய் பின்னால் அலைந்து
தெய்வீக காதல் வசனம் பேசிய ஒரு
வெங்காயம் என் முன்னே நின்று கேட்டது
இவளையா நீ காதலித்தாய்?

இன வெறுப்பு வசனம் வைத்து
திரையில் கைதட்டல் வாங்கி
காசை வங்கியில் வாங்கி
வெளியூராய் அலைந்து
வெள்ளைதோல் பெண்களுடன் உல்லாசம் தேடிய ஒரு
மாங்கொட்டை என் முன்னே நின்று கேட்டது
இவளையா நீ காதலித்தாய்?

கறுப்பாய் பிறந்திருந்தால்
இதே நாய் என் பின்னால் அலைந்திருக்குமா?
யோசிப்பதே இல்லை பேதைபெண்கள்!

ஆனால் அவள் ஒரு கறுப்பி!
எனக்கு மட்டுமேயான அழகி அவள்!

உள்ளத்தை தொட்டது எதுவென்று எழுதவில்லை.
உண்மையில் தெரியவில்லை.
ஆனால் அவள் அழகி!

ஆண்களை கண்டால் அலட்டல் இல்லை!
ஆண்களை தேடிப்போய்
அரட்டை அடிக்கும் குணமும் இல்லை!

வெள்ளைத்தோலை பார்த்து பொறாமையின்
விம்மல் விசும்பல் அவளிடம் இல்லை!

கிடைத்தது தாய் தந்தை நிறம்
கடவுள் மேல் வெறுப்பு வரவில்லை!

ஆனால்... ஆனால்...
மீண்டும் அதே கேள்வி!
இவளையா நீ காதலித்தாய்?

ஆம். இவளே தான்.
என் கறுப்பி ஒரு அழகி!
அதை என் கண்ணால் தான் பார்க்க வேண்டும்!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

தங்களின் சீற்றம் நியாயமானது
உங்கள் எண்ணங்களின் வலிமை தெரிகிறது
நம்மவருக்குள்ளே உலாவும்
போலிகளைத் துகிலுரித்தது மேல்...
என் மனைவியும் கறுப்பி தான்
நானும் விரும்பித் தான் மணமுடித்தேன்
வெள்ளைக்கும் சிவலைக்கும் இல்லாத
உயர்ந்த நற்பண்புகள்
கறுப்பியிடம் தானேயென்று அடித்துச் சொன்னதே
தங்கள் பாவிற்கு அழகு!

vinoth's படம்

ஐயா

"வெள்ளைக்கும் சிவலைக்கும் இல்லாத
உயர்ந்த நற்பண்புகள்
கறுப்பியிடம் தானேயென்று அடித்துச் சொன்னதே"

இது தவறான கருத்து. கவிதையின் நோக்கம் அதுவல்ல.

குணம் என்பது நிறத்தை பொறுத்து அல்ல. கறுப்பின் உள்ளே கறுப்போ வெளுப்பும் இருக்கலாம். அதே போல வெள்ளையின் உள்ளேயும் கறுப்போ வெளுப்பும் இருக்கலாம்.

ஆனால் காதல் வருமிடத்து வெள்ளையை மட்டும் தேடிப்போய் அலைந்து நிஜக்காதல் என்று சொல்லும் காதலை தான் இங்கே சொல்லியிருக்கிறேன்

(எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, காதலும் இல்லை)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

மன்னிக்கணும் ஐயா,
கறுப்பிகளை ஒதுக்கிவிட்டு
வெள்ளச்சிகளை நாடுவோருக்குத் தான்
கறுப்பிகளிடம் உயர்ந்த நற்பண்புகள்
இருக்கென்று சொல்ல விரும்புகிறேன்...
அதுக்காகப் பாரும்
வெள்ளைக்களையும் சிவலைக்களையும்
உயர்ந்த நற்பண்புகள்
இல்லாதவரென்றும் கூறமுடியாது தான்...

vinoth's படம்

கருத்திற்கு நன்றி

("ஐயா" வேண்டாமே, வினோத் என்பதே போதும் )

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

usavinitha's படம்

கிடைத்தது தாய் தந்தை நிறம்
கடவுள் மேல் வெறுப்பு வரவில்லை!

ஆனால்... ஆனால்...
மீண்டும் அதே கேள்வி!
இவளையா நீ காதலித்தாய்

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

kumar.k's படம்

நட்புடன்
குமார்

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றிங்க

விநோத் ரொம்ப நாட்களுக்குப் பின் தங்களது கவிதைக்கு கருத்து எழுதுவதில் சந்தோஷம்,

உண்மையில் தங்கள் மீது எனக்கு பொறாமை கொஞ்சம் அதிகம் தான்,
இருப்பினும் கோபத்திலும் உயர்வான கோபத்தின் மூலம் கறுப்பிக்கு பக்க துணையாக இருப்பது பாராட்டுக்குறியது,

நிறத்தில் ஒன்றும் இல்லை அது மனதைப் பொறுத்தது, சிலர் வெளுப்பை உயர்வு என்றும் கருப்பை தாழ்வானது என்றும் எண்ணிக் கொண்டு பிதற்றுவது பற்றி தங்களின் "கறுப்பி" தலைநிமிர்ந்து நெத்தியடி கொடுத்துள்ளாள்,

vinoth's படம்

நன்றிங்க

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றிங்க

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

good

தர்ஷினி