syedali's படம்



அவர்கள் காதல் செய்கிறார்கள் 

எனக்கும் வேண்டும் ஒருகாதல் 
மீசைதளிர்ந்த விடலைப் பருவம் 


 சீவி சிங்கார அலங்கரித்து 
ஒரு கூத்தாடிக் கோமாளியாய் 
பெண்கள் திரியும் வீதியில் 


நித்தம் அரங்கேறிய வீதிநாடகத்தில் 
கடந்துசென்ற பெண்மை கூட்டத்தில் 
சல்லடையிட்டு அறித்தான் அழகை 


மேனியில் வெள்ளைத்தோல் பொதிந்து 
அழகிய வடிவுடைய பெண்மைகள் 
விழிகள் தேடிய காதலிகள் 


ஓரப்பார்வை  விதைக்காத பெண்மைகள் 
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான் 
வடிவும் அழகும் தேடியவன் 


காலம் கடந்த தேடல்கள் 
இதுவரை கிடைக்காத காதலி 
சலிப்பில் துவண்டான் அவன் 


உள்ளத்தை தேட மறந்தவன் 
 விலக்கப்பட்ட உணர்வாய்  காதல் 
காலம் உணர்த்திய போதனை 


பறந்து விரிந்த இத்தரணியில் 
நிறைய மனிதர்களிடம் காதல்கள் 
 அகத்தில் வேதனையுமாய்  இவன் 


என்றோ ஒரு தருணத்தில் 
அவன் அகத்திலிருந்து தொலைந்தது 
நேற்றுவரை தேடிய காதல் 


அவனை விரும்பும் ஓரிதயம் 
புற அழகிலும் வடிவிலும் குன்றி 
அகத்தில் அழகுடன் அவ்வீதியில் 


அவனைசுற்றி காதல் இருந்தும் 
வழிமாறிய காதல் தேடலால் 
இன்னும் வந்துச் சேரவில்லை 
அவன் தேடாத காதல் 

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/08/blog-post_07.html

கருத்துகள்

vinoth's படம்

சீவி சிங்கார அலங்கரித்து ஒரு


4

சீவி சிங்கார அலங்கரித்து
ஒரு கூத்தாடிக் கோமாளியாய்
பெண்கள் திரியும் வீதியில்

Smile இது வேடிக்கையாக இருந்தாலும் சிலரது அழகு அழகு தான்

சிலர் யாருன்னு கேட்கப்படாது. மேக்கப் போடாமலேயே அழகாய் இருப்பாங்களே அவங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


syedali's படம்

மிக்க நன்றி தோழரே


மிக்க நன்றி தோழரே


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


Flower's படம்

அவனை விரும்பும்


10

அவனை விரும்பும் ஓரிதயம்
"""புற அழகிலும் வடிவிலும் குன்றி
அகத்தில் அழகுடன் அவ்வீதியில் """

அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல்

Clap Clap Clap

syedali's படம்

மிக்க நன்றி தோழி


மிக்க நன்றி தோழி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....