எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
இதயம் விம்ம அழுதேனே
அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
அலறிய சேனலை நோக்கிலையா
விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
வெறியொடு எங்கும் திரிந்தானே
தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
துயரை நீக்கித் தருவாயா
நாதியும் அற்றுப் போனானே-தனக்கோர்
நாடும் அற்றுப் போனானே
பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
பெற்றால் உனக்கோர் திருநாளாம்
வீதி உலாவும் வருவாயே-எம்
வேண்டுதல் நடத்தி தருவாயே
நீதி இல்லா உலகமிது –துளியும்
நேர்மை யில்லா உலகமிது
உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
உனக்குமா கருணை விழியில்லை
பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
பொருளை நாங்கள் கேட்கவில்லை
அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
ஆண்டால் தானே வளம்சூழும்
மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
மண்ணில் உயிரை விடமாட்டோம்
எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
இருந்தும் என்ன பயன்கண்டோம்
சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
செய்வாய் அருள்வாய் விரைவாநீ
எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
இனவெறி மொழிவெறி கொடியர்களே
புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
போதனைக் ஏற்கும நாடில்லை
வருவாய் இறைவா வருவாயா-ஈழ
வளமையை மீண்டும் தருவாயா
திருவாய் திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
தீயோர் செய்தார் படுநாசம்
ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
ஓரம்தானே அவர் எல்லை
கருவாய் உருவாய் அழிந்தாரே-உலகம்
காணவும் கண்ணீர் பொழிந்தாரே
புலவர் சா இராமாநுசம்
(2 votes)
கருத்துகள்
இறைவனை இறைஞ்சும்
Submitted by rajudranjit on சனி, 02/07/2011 - 9:49pm.
இறைவனை இறைஞ்சும் இனியவரே
இத்தனை உயிர்கள் இழந்தும் வந்தாரா
இருந்தால் தான் அவர் வருவாரே
தமிழில் பாக்கள் பாடினால் கேட்பாரோ
முயற்சி என்றொரு உத்தியைப் பயன்படுத்தி
தமிழர் பெறுவார் தனித் தமிழீழம்!
தங்கள் இதய ஏக்கம் மனதை தொட்டு
Submitted by kirikasan on ஞாயிறு, 09/10/2011 - 11:54am.
தங்கள் இதய ஏக்கம் மனதை தொட்டு உருக வைக்கிறது ஐயா! நன்றிகள்!
அருமையான கவிகல் ஐயா! நீடூழி வாழ்வீர்கள் ஐயா!







