சாண்டில்யன் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் கல்லூரி ஆசிரியராகவும். பத்திரிகை ஆசிரியராகவும். திரைப்படத்துறையில் கதாஆசிரியராகவும் இருந்திருந்தாலும் கதை எழுத்தாளராகவே அறியப்படுகிறார்.
இவரது கடல் புறா புதினம் மிகவும் புகழ் பெற்ற புதினம் ஆகும். இது இன்னும் காலம் கடந்து அச்சில் உள்ளது.
இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி
1929இல் ரங்கநாயகியை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் பச்சையப்பா மற்றும் நேஷனலில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
கல்லூரி படிப்பை முடித்து 1930களில் சென்னை தி.நகரில் வசித்த போது பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அப்போது அவர்களின் ஊக்கத்தால் முதல் சிறுகதை சாந்தசீலன் என்ற தலைப்பில் எழுதினார்.
அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45 வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.
கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார்.
- கடல் புறா (3 பாகம்)
- யவன ராணி (2 பாகம்)
- ராஜ முத்திரை (2 பாகம்)
- பல்லவ திலகம்
- விலை ராணி
- மன்னன் மகள்
- ராஜ திலகம்
- ஜல தீபம் (3 பாகம்)
- கன்னி மாடம்
- சேரன் செல்வி
- கவர்ந்த கண்கள்
- மலை வாசல்
- ஜீவ பூமி
- மஞ்சள் ஆறு
- மூங்கில் கோட்டை
- சித்தரஞ்சனி
- மோகினி வனம்
- இந்திர குமாரி
- இளைய ராணி
- நீள்விழி
- நாக தீபம்
- வசந்த காலம்
- பாண்டியன் பவனி
- நாகதேவி
- நீல வல்லி
- ராஜ யோகம்
- மோகனச் சிலை
- மலையரசி
- கடல் ராணி
- ஜலமோகினி
- மங்கலதேவி
- அவனி சுந்தரி
- உதய பானு
- ராஜ்யஸ்ரீ
- ராஜ பேரிகை
- நிலமங்கை
- புரட்சிப் பெண்
- சந்திரமதி
- நங்கூரம்
- ராணா ஹமீர்
- ராணியின் கனவு
- செண்பகத் தோட்டம்
- மனமோகம்
- மதுமலர்
- அலை அரசி
- மண் மலர்
- மாதவியின் மனம்
- திருப்பாவை
- கம்பன் கண்ட பெண்கள்



அருமை
அருமை
இளையதலைமுறை அறிய வேண்டிய
இளையதலைமுறை அறிய வேண்டிய படைப்பாளர் உங்கள் முயற்சி அருமை
ஷியாம்
கதாநாயகன்
சரித்திர நாவல்களின் முடிசூடா மன்னன்!
எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதாநாயகன் .
வாழ்க அவரின் புகழ்!!!!
அன்புடன் bsmanian