காளான் சப்பாத்தி

sheik
ஏப்ரல் 11, 2011 09:08 முப

தேவையான பொருட்கள்

உலர் காளான் 9பவுடர்) - 200 கிராம்
கோதுமை மாவு - 300 கிராம்
நெய் - 2 மேஜைக்கரண்டி
சீரகத் தூள் ஈ 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை

செய்முறை :
கோதுமை மாவு, உலர் காளான் பவுடர், உப்பு, நெய், சீரகத்தூள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.தண்ணீர் விட்டு, சப்பாத்திப் பிசைந்துகொள்ளவும். அந்த மாவை நன்றாக அடித்து பதப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் ஒரே உருண்டையாக உருட்டி வெள்ளைத் துணியில் சுற்றி ஒரு மணிநேரம் வைக்கவேண்டும்.
பின்னர், எடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். சப்பாத்திப் பலகையில் வைத்துக் கட்டையால் சதுர வடிவமாகவோ அல்லது உருண்டை வடிவமாகவோ தேய்த்து, தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் மாற்றிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறச் சுவையாக இருக்கும்.