முட்டை நூடுல்ஸ்

sheik
ஏப்ரல் 11, 2011 09:08 முப

தேவையான பொருட்கள்

லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 200 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
முட்டை - 4

தயாரிக்கும் முறை

செய்முறை ;
முட்டையில் ஆம்லெட் செய்து விரல் நீளத்திற்கு கட் செய்து கொள்ளவும்.
காய்கறிகளை சிறிது நீளமாக வெட்டிக் கொள்ளவும். நூடுல்ஸ்சை வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயி்ல் எண்ணை ஊற்றி காய்ந்ததும், காய் கறிகளை வதக்கி வேகவைத்துக் கொள்ளவும்
தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.
வேகவைத்து நூடுல்சுடன் இக்கலவையைச் சேர்த்து கட் செய்த ஆம்லெட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி.