அற்புதக் கொய்யா

sheik
ஏப்ரல் 11, 2011 09:08 முப

குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும்,மருத்துவக்குணங்களும் வியப்பானவை.
ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் சி உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ.பி. ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுன்றன. வாழைப்பழத்தின் உள்ளதை விட கூடுதலாக பொட்டாட்சியம் சத்து உள்ளது.
கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும் தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.
தோல்நோய்களை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெறவும். சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவுகிறது.
தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீ்ட்டுத்தருகிறது.
அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.