கருவேப்பிலை பச்சடி (அம்மாவின் சமயல்)

lavaa
ஏப்ரல் 08, 2011 03:25 பிப

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை அரை சுண்டு
மல்லி 4மேசை கரண்டி
செத்தல் மிளகாய் 7
வெங்காயம் பாதி
தேங்காய் சிறியது பாதி
உப்பு
புளி

தயாரிக்கும் முறை

1 முதலில் கருவேப்பிலையை வறுக்கவும்.
2.மல்லி, செத்தல்மிளகாய் வறுக்கவும்.
3.மல்லி, செத்தல்மிளகாய், கருவேப்பிலை மிக்சியில் பவுடராக அடிக்கவும்.
4.பவுடருடன் சிறிது தண்ணீர் விட்டு அதனுடன் தேங்காய்பூ,வெங்காயம்,உப்பு,புளி சேர்த்து அரைக்கவும்.
5.சோற்றுடன் சாப்பிடலாம்.