புலன் விசாரணை - பாகம்-4

ரஹீம்  கஸாலி
மார்ச் 17, 2011 12:40 பிப
"சொல்லுங்க...எதுக்கு அவளை கொலை பண்ணுனீங்க".... இந்த கேள்வியால் அதிர்ந்த தரன் "சார் சத்தியமா எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை...." "பின்னே எதுக்கு அவங்கள கொலை பண்ணப்போவதா மிரட்டுனீங்க...." "அது வந்து......வந்து....சொல்லிடறேன் சார்.....நானும் ஸ்ரீமதியும் ஒரே படத்துல அறிமுகமானதால எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்துச்சு...அதுவே போகப்போக காதலா மாறிச்சு. கொஞ்சம் அப்படி இப்படி இருந்ததுல ரெண்டு தடவை கர்ப்பம் ஆனாள். யாருக்கும் தெரியாம கலைச்சா". "அப்படின்னா இப்ப கர்ப்பமா இருந்ததுக்கும் நீங்கதான் காரணமுன்னு சொல்லுங்க...." "ஆமா....நான்தான் காரணம். பிரச்சினையே அதுதான்....அன்னைக்கு ஷூட்டிங்க்ல இருந்த ஸ்ரீ மதி எனக்கு போன் போட்டா....நானும் போனேன். போனவுடனே நான் கர்ப்பமா இருக்கேன். ஏற்கனவே ரெண்டு தடவை கர்பத்த கலைச்சதால இனி கலைக்க முடியாது. அது என் உயிருக்கே ஆபத்தாகிடும்ன்னு டாக்டர்கள் சொல்றாங்க....அதனால இந்த விஷயம் யாருக்கும் தெரியறதுக்கு முன்னாடியே என்னை கல்யாணம் செஞ்சுக்கங்கன்னு சொன்னா....நான் இப்பத்தான் வளர்ந்து வர்றேன். இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா ரசிகைகள் ஆதரவு எனக்கு வராது. இன்னும் சில வருஷம் கழிக்கட்டும்ன்னு சொன்னேன். ஆனா அவ பிடிவாதமா இருந்தா....அதான் கோபத்துல அப்படி கத்திட்டு வந்துட்டேன். இதுதான் சார் நடந்தது....நான் கொலையெல்லாம் பன்னால சார். நம்புங்க...." "அப்புறம் எதுக்கு அவங்க எனக்கு பழககம்தான்னு பொய் சொன்னீங்க?" "இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா என் கேரியர் பாதிக்கும்ன்னு அப்படி சொல்லிட்டேன் சார். " "சரி..உங்களுக்கு தெரிஞ்ச உண்மைகளை சொல்லுங்க.....ஸ்ரீமதிக்கும் யாருக்கும் பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், முன் விரோதம் இருந்துச்சா?" "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்...இருந்திருந்தா எங்கிட்ட சொல்லிருப்பா".... அப்போது போன் வந்தது அதை எடுத்து பேசிக்கொண்டிருந்தான் தரன். இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம். கான்ஸ்டபிளிடம் ஹஸ்கி வாய்சில்....... "யோவ்...இவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கணும். இவனை நோட்டம் போட்டுக்கே இருக்கணும். தேவை பட்டா கைதுகூட பண்ணலாம்." "சார்...ஒரு சந்தேகம்.இவன் இன்னைக்கு ஒரு நடிகர். இவனை கைது பண்ணினா பிரச்சினை ஏதும் வராதுல்ல சார்..." "கான்ஸ்டபில்....உங்களுக்கு தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. தெரியுமா?" "கேள்விபட்டிருக்கேன் சார்....." "அவங்க அன்னைக்கு பெரிய நடிகருங்க....அப்படிப்பட்ட நடிகருங்கலையே லஷ்மி காந்தன்னு ஒரு மஞ்ச பத்திரிகை நிருபர் கொலை வழக்குல கைதுபன்னி உள்ளே போட்டுட்டாங்க....அவங்களுக்கே இந்த கதினா....இவனெல்லாம் பிஸ்கோத்து பய..." அப்போது நடிகர் தரன் "சார்...எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருது " "சொல்லுங்க தரன் " "டைரக்டர் ரெட்டி சார் படத்துக்கு நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தா ஸ்ரீமதி...அதே நாள்ல....இன்னொரு படத்துக்கும் கால்சீட் கொடுத்துட்டா.... எங்கள அறிமுகப்படுத்துன டைரக்டர் அவருதான். அதனால நம்ம டைரக்டர் தான....அப்புறம் பேசிக்கலாம்ன்னு உரிமையில அவரு படத்துல நடிக்க போகாம வேற படத்துக்கு நடிக்க போயிட்டா....அதுனால அவங்க ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் கூட போன்ல நடந்துச்சாம். " "இதை யாரு சொன்னது?" "ஸ்ரீமதிதான் சொன்னா...." "எப்ப?" "இருபது நாளுக்கு முன்னாடி...." "சரி அதுக்கப்புறம்?" "கடுமையா போன்ல மிரட்டினாருன்னுஅன்னிக்கு ராத்திரி என்கிட்டே சொல்லி அழுதா " "அப்படியா? என்ன சொல்லி மிரட்டினாராம் " "நன்றி கெட்டவ நீ....நான் அறிமுகப்படுத்தினேன்....இன்னைக்கு எனக்கு எதிரா பேசுறியா?உன்னை ஒழிக்காம விடமாட்டேன். நீ எப்படி பீல்டுல இருக்கேன்னு பார்த்திடுறேன்னு மிரட்டினாராம் " விசாரணை வரும் வியாழன் தொடரும்.....